32 ஆண்டுகளாக புடெல்லி தீவை பாதுகாத்த மனிதர் !

0

நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கினால் இன்டர்நெட்

32 ஆண்டுகளாக புடெல்லி தீவை பாதுகாத்த மனிதர் !
ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு ''என்னடா.. இது வாழ்க்கை''  என்று சலிப்பு தட்டுகிறது.

ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர் பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார். 

ஆனால் தற்போது அவருக்கே தீவில் இருந்து வெளியேற உத்தரவிடப் பட்டுள்ளது. அவர் யார்? அந்த தீவு எது? என்பது பற்றி இப்போது காண்போம்.

தீவை பாதுகாத்த மனிதர் !

இத்தாலியின் ராபின்சன் க்ரூஸோ என்று அழைக்கப்படும் மவுரோ மொராண்டி (81) நபர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். 

1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் இத்தாலி கடற்பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி. 

அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு - மணல் கொண்ட கடற்கரைக்கு பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர். 

இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரை

அவருடன் வந்த மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணம் செய்ய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, மவுரோ மொராண்டியின் மனமோ வேறு மாதிரி யோசித்தது. 

அந்த தீவின் பாதுகாவலர் ஓய்வு பெறுவதாக அறிந்த அவர் தான் வைத்திருந்த படகை விற்று தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். 

அன்றிலிருந்து இன்று வரை புடெல்லி தீவை கண் இமை போல் பாதுகாத்து வருகிறார் மொரண்டி. 

இவர் பல ஆண்டுகளாக தீவை எந்த வித பிரச்சனையும் இன்றி பாதுகாத்து, கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார். தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார். 

கண் இமை போல் பாதுகாத்த மொரண்டி

அதாவது அங்குள்ள கடற்பாறைகள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகியவற்றை மவுரோ மொராண்டிவை விட அறிந்தவர்கள் வேறு யாருமில்லை. 

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புடெல்லியை நிர்வகித்து வரும் லா மடாலேனா தேசிய பூங்கா அதிகாரிகள் மவுரோ மொராண்டியை, தீவில் இருந்து வெளியேறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். 

அவரை புடெல்லி தீவிலேய தங்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசிடம் கேட்டு 70,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனுக்கள் அனுப்பப்பட்டன. 

லா மடாலேனா தேசிய பூங்கா

ஆனால் தொடர் அழுத்தத்தால் 32 ஆண்டுகளுக்கு பிறகு புடெல்லி தீவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் மவுரோ மொராண்டி. 

''32 ஆண்டுகளாக புடெல்லி தீவை நான் பாதுகாத்துள்ளதால் எதிர் காலத்தில் புடெல்லி இது போல் பாதுகாக்கப்படும் என்று தான் நம்புவதாக'' மவுரோ மொராண்டி தெரிவித்தார். 

ஆனால் இவரை போல் இந்த தீவை இனி மேல் யாரும் பாதுகாக்க முடியாது என்று இத்தாலி மக்கள் கூறியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings