மக்கள் பலபேரும் பொதுவாக அறிந்திராத இந்தியச் சட்டம் எது?

0

கல்லூரியில் சேர்ந்த நீங்கள், ஆசைப்பட்டு புதியதாக பைக் ஒன்றை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் மட்டும் பயன்படுத்தி வருகிறீர்கள். 

மக்கள் பலபேரும் பொதுவாக அறிந்திராத இந்தியச் சட்டம் எது?

ஒரு நாள், உங்களுடைய நெடு நாளைய நண்பன் ஒருவன் உங்கள் பைக்கை ஒரு முறை ஓட்டி பார்கிறேன் கொடு என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் .

பழைய நன்றிக்காக நீங்களும் அதை கொடுத்து விடுகிறீர்கள். உங்களுடைய நண்பன் உங்கள் பைக்கை ஓட்டிச் செல்லும் போது, ஏதோ ஒரு சாலையில் ஒரு தண்ணீர் லாரியில் மோதி தலையில் அடிப்பட்டு இறந்து போகிறான். 

இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. நடந்த சம்பவத்தை ஆராய்கையில், இறந்த இளைஞனுக்கு வயது 17 என்று அறிந்து கொளகின்றனர். 

அவன் தலைக்கவசம் அணியவில்லை என்று தெரிகிறது. வண்டியைக் கொண்டு மோதிய 40 வயது லாரி ஓட்டுனர் குடித்திருக்கவில்லை. 

இருக்கை பெல்ட்டு அணிந்திருக்கிறார். வேகமாக ஓட்டவும் இல்லை. இப்போது காவலர்கள் யார் மீது வழக்கு போடுவார்கள்? தெரியுமா?

சட்டப்படி கைது செய்யப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர்.

1 - லாரி ஓட்டுனர்.

அலட்சியமாக வண்டி ஓட்டியதற்காக, 304 - ஏ பிரிவின் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.

2 - நீங்கள்

சாத்தியமான கொலைக் குற்றத்திற்காக, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபருக்கு உங்கள் வாகனத்தை ஓட்டக் கொடுத்த காரணத்துக்காக 304 (II) பிரிவின் கீழ், 

ஆயுள் தண்டனையோ பத்து ஆண்டுகள் சிறையோ அபராதமோ இரண்டுமோ வழங்கப்படும்.

மேலும் பல பேருக்கு இரண்டாவதாகச் சொன்னச் சட்டத்தைப் பற்றி தெரிந்ததிருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஐதராபாத்தில் இத்தகைய ஒரு நிகழ்வு நடந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாத தனது தோழிக்கு வாகனம் ஓட்டக் கொடுத்தததற்காக ஒரு மாணவயின் மீது 304 (II) பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. 

எனவே, அடுத்த முறை உங்கள் வாகனத்தைக் உங்கள் நண்பனுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபருக்கோ கடன் கொடுப்பதற்கு முன் யோசியுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings