தந்தை இரந்த சில மணிநேரத்தில் தாயும் இரந்த சோகம்... பிள்ளைகளுக்கு அதிர்ச்சி !

1 minute read
0

கொரோனாவினால் கணவர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்துள்ள சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை இரந்த சில மணி நேரத்தில் தாயும் இரந்த சோகம்... பிள்ளைகளுக்கு அதிர்ச்சி !
வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லைமேடு பகுதியில் வசித்து வந்தவர் பிச்சாண்டி. 

இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அகிலா என்ற 23 வயது மகளும், வசந்தகுமார், விமல் என்ற இரு மகன்களும் உள்ளனர். 

பிச்சாண்டி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆரோக்கியமாக செயல்பட உணவே காரணம் !
அவரைத் தொடர்ந்து மனைவி செல்விக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !
ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிச்சாண்டி உயிரிழந்தார். அவர் இறந்த சில மணி நேரத்திலேயே, அவரது மனைவி செல்வியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தனது தந்தை மற்றும் தாய் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களது பிள்ளைகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings