சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? டாக்டர் !

0

கோவிட்-19 பெருந்தொற்று உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவானது. இந்தப் பெருந்தொற்று பரவலின் வேகம் பன் மடங்காக அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
டாக்டர் வி. மோகன் - Dr.Mohan’s Diabetes Specialties Centre

உயிரிழப்புகள் அதிகரிக்க இணை நோய் (comorbidity) முக்கியக் காரணியாகக் கருதப்பட்டது. அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகம் என்றும் சொல்லப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவருக்கும் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. பலர் குணமாகியும் உள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக டயாபட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மத்தியில் கொரோனா குறித்த பயம் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

இந்த வைரஸ் தாக்கம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா, 

என நம் மனதில் எழும் பல சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார் டாக்டர் வி. மோகன், Dr.Mohan’s Diabetes Specialties Centre-ன் தலைவர் மற்றும் தலைமை மருத்துவர்.

  • “நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை தான். இதை மறுப்பதற்கில்லை. 
  • ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத நோயாளிகளுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது,” என்றார். 

ஊரடங்கு சமயத்தில் மருத்துவமனைகள் மூடியிருந்தன. பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைகள் திறந்த பிறகு இவரது மருத்துவமனையில் 

சர்க்கரை நோயாளிக்கு கொரோனா பாதிப்பு

நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஆண்டிபாடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

அப்போது அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உண்டாகியிருந்தது என்பதை விளக்கிய டாக்டர்,

  • “எங்கள் மருத்துவமனைக்கு வரும் 40 சதவீத நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. 
  • இதில் 50 சதவீத நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு வந்ததற்கான அறிகுறிகளே தெரியவில்லை. 
  • இதற்குக் காரணம் அவர்கள் தங்களின் சர்க்கரை அளவை சரியான மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 
  • அதே சமயம் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது,” என்றார்.

வைரஸின் தன்மை ஒன்றாக இருப்பினும் தாக்கப்படும் நபரின் உடல் நிலையைப் பொறுத்தே பாதிப்பு இருக்கும் என்பதை டாக்டர் மோகன் தெளிவுபடுத்தினார்.

சர்க்கரை நோயை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது கோவிட் தொற்று மட்டுமல்ல. கடந்த இருபதாண்டுகளில் சார்ஸ், நிப்பா, எபோலா போன்ற பல வைரஸ் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

இனியும் இது போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. 

எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்வதே சிறந்தது என்பது டாக்டர் மோகனின் அறிவுரையாக இருந்தது.

  • “சர்க்கரை நோயை சரியாக கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை எங்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து ஏற்படுத்துகிறோம,” என்றார் டாக்டர் மோகன்.

கொரோனா Vs நீரிழிவு

கொரோனா Vs நீரிழிவு

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஸ்டீராய்ட் அதிக டோஸ்களில் வழங்கப்பட்டது. உயிர்காக்கும் சிகிச்சை முறை என்பதால் இது பின்பற்றப்பட்டது.

ஆனால் இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

அதாவது அதுவரை டயாபட்டீஸ் இல்லாதவர்களுக்குக் கூட கொரோனா பாதிப்புக்குப் பிறகு சுகர் அளவு அதிகரித்ததாக விளக்கினார் டாக்டர்.

கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்டீராய்ட் கொடுக்கப் பட்டதால் கோவிட் காரணமாக ஏற்படும் நீரிழிவு (Covid-induced diabetics) என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது போன்ற பாதிப்பு ஏற்பட்ட பலர் இவரிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்துள்ளனர்.

ஸ்டீராய்ட் சிகிச்சை

மன அழுத்தம், பயம், ஊரடங்கு காரணமாக நடைபயிற்சி செய்யாமல் இருப்பது, எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி செய்யாமல் போவது 

என பல்வேறு காரணிகளுடன் ஸ்டீராய்ட் செலுத்தப்படுவதும், நீரிழிவு ஏற்படுவதற்கான காரணி என்கிறார் டாக்டர் மோகன்.

இவை தவிர கொரோனா தொற்று ஏற்படுவதால் கணையம் பாதிக்கப்பட்டு, அதனாலும் நீரிழிவு நோய் வருவதுண்டு என்றார்.

  • “கொரோனா வைரஸ், நீரிழிவு இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. 
  • சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கூடவே ஹைப்பர் டென்சன், கிட்னி பாதிப்புகளும் இருப்பதால், கொரோனா தொற்று எளிதாக ஏற்படக்கூடும். 

  • கொரோனா தொற்று பாதித்தால் நீரிழிவு நோய் அதிகரிக்கக் கூடும். அதனால் இரண்டிலும் தனித்தனியாக கவனம் செலுத்தி  முறையாக சிகிச்சையளித்தால் குணப்படுத்தி விடலாம்,” என்று நம்பிக்கை யளிக்கிறார் டாக்டர் மோகன்.

கொரோனா உயிரிழப்புகள் Vs நீரிழிவு

கொரோனா உயிரிழப்புகள் Vs நீரிழிவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 33% பேர் நீரிழிவு நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து டாக்டர் மோகன் விளக்கும்போது,

  • “ஹெச்பிஏ1சி டெஸ்ட் மூன்று மாத சர்க்கரையின் சராசரி அளவைத் தெரிந்து கொள்ளலாம். 
  • இதன்படி கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை அளவே கொரோனா உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம். முறையான மருந்து, 
  • இன்சுலின் போன்றவற்றை எடுக்காமல் கவனக் குறைவாக இருந்தவர்களே உயிரிழந்துள்ளார்கள்,” என்றார். 

  • நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து உயிரிழந்தவர்கள் மிக மிகக் குறைவு என்கிறார்.

நீரிழிவு Vs முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நீரிழிவு Vs முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் மருத்துவ ஆலோசனை பெற மருத்துவமனைக்குச் செல்வது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால், 

வெளியே செல்லும் போது நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டாக்டர் மோகன் விவரித்தார்.

  • கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும் முழுமையாக நீங்கி விடவில்லை. 
  • ஒரு நபருக்குக் கூட தொற்று ஏற்படாமல் இருக்கும் போது தான் தொற்று முழுமையாக நீங்கி விட்டது என்று அர்த்தம். 
  • அதுவரை கொரோனா தொற்றும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தொடரும் அபாயம் உள்ளது. 
  • எனவே தொடர்ந்து வலியுறுத்தப்படுவது போல் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கை கழுவுவது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்,” என்கிறார்.

நீரிழிவு நோயாளிகள் Vs கொரோனா தடுப்பூசி

நீரிழிவு நோயாளிகள் Vs கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி தற்போது சுகாதாரத் துறையினருக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டமாக பொது மக்களின் பயன்பாட்டிற்கும் வர உள்ளது. 

அந்த சமயத்தில் எல்லார் மனதிலும் எழும் கேள்வி, ‘நீரிழிவு நோய் உள்ளவர்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம என்பதுதான்?’ அது பற்றி பதில் அளித்த டாக்டர் வி மோகன்,

  • “கட்டாயம் எல்லாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இணை நோய் இருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் என்பதால் 
  • நீரிழிவு நோயாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்கிற சந்தேகத்திற்கே இடமில்லை. 
  • கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்கு மருத்துவ ரீதியாக பிரத்யேகக் காரணம் ஏதேனும் இருந்தால் மட்டுமே தடுப்பூசியைத் தவிர்க்கலாம். 

  • அதற்கு அவரவரின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றப்பின் போட்டுக் கொள்ளுங்கள்.”

தடுப்பூசிக்கு வயது வரம்பு இல்லை. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். 

18 வயதிற்கும் கீழே இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள், இதர குறிப்பிட்ட நோய் 

அல்லது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர அனைவரும் போட்டுக் கொள்வது அவசியம், என்கிறார்.

கோவிட் தடுப்பூசி Vs பக்க விளைவுகள்

கோவிட் தடுப்பூசி Vs பக்க விளைவுகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 99 சதவீதம் பேருக்கு இதுவரை பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்கிறார் மருத்துவர் மோகன். 

மற்ற தடுப்பூசிகள் போட்டால் வருவது போல் லேசான வலி, லேசான காய்ச்சல், லேசான மூட்டு வலி போன்றவை ஏற்படுவதுண்டு. இவைத் தவிர தீவிர பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டதில்லை.

எத்தனையோ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மூன்று அல்லது நான்கு பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது என்கிறார். 

இவர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக நிரூபிக்கப்பட வில்லை என்றார்.

  • கோவிட்-19 தடுப்பூசியைப் பொருத்தவரை தடுப்பூசி போடப்படுவதால் வரும் சிறு பக்க விளைவுகளின் ஆபத்துகளை விட கொரோனா போன்ற கொடிய நோயிலிருந்து உயிர் பிழைக்கும் நன்மையே அதிகம். 
  • அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்போதைய நிலையில் சிறந்தது,” என்று தெளிவாகக் கூறினார் டாக்டர் வி.மோகன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings