சென்னையை பகுதியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பணம் நகைகளை கொள்ளை அடித்து விற்று தெரியாததை போல் நாடகம் ஆடிய நபர்கள் பத்து ரூபாய் நோட்டில் போலீசிடம் சிக்கினர்
இவர் மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வருகின்றார். கடந்த மாதம் 2-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள துரையின் தாய் இறந்து விட்டதாக தகவல் வந்தது.
உடனே துரை அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் நந்தினியிடம் சாவியைக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். ஒரு மாதம் கழித்து கடந்த 7-ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் கடைக்கு செல்வதற்காக பீரோவில் இருந்த பணத்தை எடுப்பதற்கு சென்ற போது 84 ஆயிரம் ரூபாய் பணம் 31/4 சவர தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போனது தெரிய வந்தது
அந்தப் புகாரில் அவர் எப்பொழுதும் பணத்தை எண்ணி பணத்தின் முதல் தாளில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று எழுதி அவரது கையெழுத்தை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதே போல் 84 ஆயிரம் ரூபாய் பணத்தின் முதல் தாளிலும் எவ்வளவு பணம் இருக்கின்றது குறிப்பிட்டு கையெழுத்து போட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். துரை ஊருக்கு செல்லும் பொழுது சாவி கொடுத்த நந்தினியிடம் போலீசார் விசாரணையை செய்தனர்.
வீட்டைத் திறக்கவில்லை எனவும் காணாமல் போனது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொழிச்சலூர் பகுதியில் கள்ளத் தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த நிலையில்
அதே இடத்தில் துரையின் நண்பர் காசு கொடுத்து மது பாட்டில்களை வாங்கிய பிறகு மீதம் உள்ள தொகையை கொடுத்துள்ளனர்.
கொடுக்கப்பட்ட தொகையில் பத்து ரூபா நோட்டில் 4,500 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு துரையின் கையெழுத்து போடப்பட்டிருந்தது.
இது குறித்து துரைக்கு தகவல் தெரிவிக்க துரை விரைந்து சென்று மது விற்பனை செய்தவரிடம் இது பற்றி கேட்ட போது உமாசங்கர் தான் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து சங்கர் நகர் போலீசாரிடம் துரை தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்று நந்தினி (28) மற்றும் இவரது கணவர் உமாசங்கர் (30) ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் கைது செய்து
அதன் பிறகு அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 வெள்ளி கொலுசு, 3 1/4 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Thanks for Your Comments