தங்கச் சங்கிலி நிதி கொடுத்த பெண்ணுக்கு இரண்டே நாளில் வேலை... மு.க..ஸ்டாலின் !

0

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருந்தாலும், தனது தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்காக கொடுத்த பெண்ணுக்கு தமிழக அரசு 2 நாட்களில் வேலை வழங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாக
யார் அந்தப் பெண்? அவர் ஏன் தன் சங்கிலியை கழுற்றிக் கொடுத்தார்?

ஜூன் 13ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் 'மேட்டூர் அணையைத் திறக்கச் சென்ற போது  பொட்டனேரியில் முதல்வரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். 

மத்திய அரசின் அருமையான அசத்தல் திட்டம்... இலவச மருத்துவம் !

அங்கு காரை நிறுத்தி மக்களை பாா்த்து முதல்வர் கரம் கூப்பினார். அப்போது அங்கு நின்ற கல்லூரி மாணவி சௌமியா, கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு 

வழங்குவதாகக் கூறி தனது கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி வழங்கினார். 

அத்துடன் தனது குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கி எழுதிய கடிதத்தையும் ஸ்டாலினிடம் அந்த மாணவி வழங்கினார். 

அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர், மாணவி சௌமியாவை பாராட்டினார். பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. 

பேரிடர் காலத்தில் கொடையுள்ளதோடு உதவ முன் வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் 

அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்து செளமியாவின் கடிதத்தையும் இணைத்திருந்தார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி

முன்னதாக செளமியா தனது கோரிக்கை மனுவில், "நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு இரண்டு அக்கா.

அவர்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த ஆண்டு எனது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். 

உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகள் - நோயின் அறிகுறியா?

அம்மாவின் மருத்துவச் செலவுகளால் எனது அப்பாவின் சேமிப்பு பணம் அனைத்தும் செலவாகி விட்டது. 

தற்போது அப்பாவுக்கு ஓய்வூதியமாகக் கிடைக்கும் 7000 ரூபாயில் மூவாயிரம் ரூபாய் வாடகையாகச் செலவாகிறது. 

மீதமுள்ள நாலாயிரம் ரூபாயில்தான் குடும்பம் இயங்கி வருகிறது. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். 

நான் அரசு வேலை கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. எனது ஊரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால்கூட உதவியாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

வாடகைக்கு வீடா? பெண்களே ஜாக்கிரதை !

செளமியா கோரிக்கை மனுகொடுத்த இரண்டே நாள்களில், (15.06.2021) அமைச்சர் செந்தில் பாலாஜியும், 

தங்கச் சங்கிலி நிதி கொடுத்த பெண்ணுக்கு இரண்டே நாளில் வேலை... மு.க..ஸ்டாலின் !

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகமும் செளமியாவின் வீட்டிற்கே சென்று வேலை வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கியுள்ளனர். 

செளமியா வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள JSW Steel நிறுவனத்தில் செளமியாவுக்கு அலுவலக பணிக்கான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?

மாத சம்பளமாக 17,000 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக செளமியாவிடம் பேசி வாழ்த்தும் தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings