கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் போட்டுக் கொண்ட போது காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் வந்து, அடுத்த டோஸில் அவை இல்லாமல் இருக்கலாம்.
அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். தடுப்பூசியின் மூலம் ஒரு ஆன்டிஜெனை உடலுக்குள் கொடுக்கிறோம்.
அது உடலுக்குள் எத்தகைய ரியாக்ஷனை ஏற்படுத்துகிறது என்பது தான் இது. அதற்கு நீங்கள் முதலில் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஆன்டிஜென் உள்ளே நுழையும் போது நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலானது அதை வெளியேற்ற உடலிலுள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி விடும்.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
அப்படித் தூண்டப்படும் போது ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே விளைவுகள் இருக்கும். தீவிர நோய் எதிர்ப்பாற்றல் உள்ள, ஆன்டிபாடி அதிகமுள்ள நபராக இருந்தால் தடுப்பூசியால் எந்தப் பக்க விளைவுமே ஏற்படாமலும் போகலாம்.
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
அதற்காக காய்ச்சலோ, உடல் வலியோ வந்தால் தான் தடுப்பூசி வேலை செய்கிறது என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதும் குறைந்த அளவில் உங்கள் உடலுக்குள் ஆன்டிஜென் வந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.
அது வெள்ளை அணுக்களை எதிர்த்து வெற்றி பெற்று விடுகிறது. அடுத்த டோஸ் கொடுக்கும் போது அது மீண்டும் தூண்டப்படுகிறது. அதன் விளைவாக வேறொரு புதிய அறிகுறி உருவாகலாம்.
உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !
தடுப்பூசியின் நோக்கமே ஒரு நோயை மிகமிகக் குறைந்த அளவில் உருவாக்கி, அந்த நோயில் சாதாரணமாக என்னென்ன பிரச்னைகள் வருமோ, அவற்றை உடலுக்குள் உருவாக்கி, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவது தான்.
எனவே, அறிகுறிகள் மாறுபடுவதை நினைத்து எந்தக் குழப்பமும் கொள்ள வேண்டாம்.
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் ரத்தம் உறைதல் பிரச்னையெல்லாம் நிச்சயம் வராது. பயப்பட வேண்டாம்." தடுப்பூசியின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் செலுத்திக் கொள்ளும் முதல் டோஸ் தடுப்பூசி என்பது எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருக்கக்கூடிய செல்களில் உணர்திறனை உண்டாக்கும்.
எனவே இப்போதைக்கு இருக்கும் ஆய்வு தகவல்படி இரண்டு டோஸ் போடுவதே நன்மை தரும்.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
முதல் டோஸில் 50 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இரண்டாம் டோஸில் 70-80 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் எனவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.
Thanks for Your Comments