வாஷிங் மெஷினுக்குள் வாழ்ந்த தேனீக் கூட்டம் அகற்றும் பெண் !

1 minute read
0

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குடும்பத்தின் வீட்டில் பயன்படுத்தப்படாத வாஷிங்மெஷின் ஒன்றை செடி, கொடிகள் இருக்கும் தோட்டம் பக்கம் வைத்துள்ளனர். 

வாஷிங் மெஷினுக்குள் வாழ்ந்த தேனீக் கூட்டம் அகற்றும் பெண் !
பல நாட்கள் கழித்து அந்த வாஷிங்மெஷின் இருக்கும் பக்கம் வீட்டின் உரிமையாளர் பெண்மணி செல்லும் போது தேனீக்கள், வாஷிங் மெஷினுக்குள்ளேயே கூடு கட்டியுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.

தேனீக்கள் அதிக அளவில் இருந்த காரணத்தால் அவை, வீட்டைச் சுற்றியும் அதிகளவு பறந்துள்ளது.

இதனால் தேனீக்களின் கூட்டை அகற்ற முடிவு செய்த வீட்டு உரிமையாளர் தேனீக்களை லாவகமாக கையாளும் பெண் நிபுணர் எரிகா தாம்சனை அழைத்துள்ளார்.

இவர்களை அழைப்பை ஏற்ற எரிக்கா தாம்சன் வாஷிங் மெஷினை திறந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர்கள் எதிர் பார்க்காத அளவிற்கு தேனிக்கள் அங்கு கூடு கட்டியுள்ளது. 

தேனீக்களை ரசிக்கும் எரிகா தாம்சன், தேனீக்கள் கடிக்கும் என்ற பயம் சிறிதும் இல்லாமல், அவற்றை தண்ணீரை அள்ளுவதுபோல் அள்ளி, மற்றொரு பெட்டியில் சேகரிக்கிறார்.

எரிகா தாம்சன் தேனீக்களை எடுத்து மற்றொரு பெட்டியில் வைக்கும் பணிகளை, அவருடன் சென்ற மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள எரிகா, தேனீக்கள் சேகரிப்பதில் தனக்கு எப்போதும் அளவு கடந்த ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்

வாஷிங் மெஷினுக்குள் தேனீக்கள் கூட்டம் மிகுந்து இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்த அவர், அதனை பத்திரமாக சேகரித்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாவில் ஒருவர் தேனீக்களை வெறும் கைகளாலேயே சேகரிக்கும் போது அவை உங்களை கடிக்கவில்லையா என கேட்டதற்கு, 

'தனக்கு தேனீக்களை சேகரிப்பதில் மிகுந்த அனுபவம் இருப்பதாகவும், அவற்றுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவை கடிப்பதில்லை' எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல லட்சம் பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings