மிக்ஸி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்தளவுக்கு அத்தியாவசியமான பொருளாக ஒவ்வொரு வீட்டிலும் உருவாகி விட்டது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அப்படி இருக்கும் போது அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸியை உரிய முறையில் பராமரிக்க வேண்டாமா?
கள்ளகாதல் என்றால் விரலை வெட்டி சாப்பிடும் தண்டனைகள் !
மிக்ஸி திடீரெனப் பழுதானால் அன்று எந்த வேலையும் ஓடாது. அவசரத்திற்கு இன்று எந்த வீட்டிலும் அம்மி கல்லும் கிடையாது.
அதே போல் வாங்கிய் இண்டு மூன்று மாதங்களிலேயே மிக்ஸி ரிப்பேர் என சொல்லும் கூட்டம் தான் அதிகம்
உண்மையிலேயே மிக்ஸி தான் பிரச்னையா அல்லது உங்கள் பயன்பாட்டில் பிரச்னையா..?
கரண்ட் பவர் லோவாக இருக்கும் போது மிக்ஸியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பவர் குறைந்து இருக்கும் போது மிக்ஸியை ஆன் செய்தால் மோட்டார் பழுதாகிவிட வாய்ப்புண்டு.
மனித உடல்களை சாப்பிடும் அகோரிகள் - அப்படியே ஷாக் ஆயிட்டேன் !
மிக்ஸியை பொருத்தும் போதே மிக்ஸி ஜாரின் அடியில் உள்ள கப்ளர் மிக்ஸியில் நன்றாக பொருந்தி இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
மிக்ஸி ஜார் பிளேட் பழுதடையாமல் இருக்க எப்போதும் ஜாரை மூடியே வைப்பது அவசியம்.
மிக்ஸியில் எதை அரைப்பதாக இருந்தாலும் அப்படியே அரைக்காமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு அரைத்தால் பிளேடு வீணாகாது.
முதல் மற்றும் இரண்டாவது வேகத்தில் இருக்கும் பட்டனை வைத்து சுற்றினால் போதும்.
கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !
இது மிக்ஸியின் ஆயுளை நீட்டிக்கும். திடீரென மிக்ஸி மோட்டாருக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் பழுதடையும். பிளேடும் பழுதடையும்.
அதிகம் கரகரப்பாக இருக்க கூடிய பொருளை மிக்ஸியில் போடும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். மிக்ஸி சுற்றும் போது உங்கள் கைகளை ஜாரின் மேல் வைத்துக் கொள்வது நல்லது.
மிக்ஸியை தொடர்ந்து விடாமல் அரைத்து கொண்டே இருந்தால் மிக்ஸி சூடாகிவிடக் கூடும். அதனால் இடை வெளிவிட்டு அரையுங்கள்.
ஜாரின் கழுத்து வரை பொருட்களை நிரப்பாதீர்கள். அதோடு மிக்ஸி ஓடும் போது திறந்து பார்க்கவும் முயற்சி செய்ய வேண்டாம்.
குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்வது எப்படி?
மிக்ஸியை ஆஃப் செய்யும் போது மிக்ஸியின் பட்டனை மட்டும் அல்லாமல் அதன் பிளக் வெளியே எடுப்பதும் நல்லது.
மிக்ஸியை பாத்திரங்களோடு வைத்து கலந்து கழுவ போடக்கூடாது. மிக்ஸியில் எதை அரைத்தாலும் உடனடியாக கழுவி விட வேண்டும்.
பின் உள்பக்கம் மற்றும் அடியில் தண்ணீர் இல்லாதவாறு காய வைக்க வேண்டும். மிக்ஸியை பயன்படுத்தும் போது அடியில் நீர் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை மிக்ஸி ஜாரின் அடியில் இருக்கும் பகுதியை சோப்பு நீர் கொண்டு கழுவி சுத்தமாக வைக்க வேண்டும்.
வேக்வம் ஃப்ரையிங் முறையில் உணவு தயாரிப்பது ஆரோக்கியமானதா?
அடிப்பகுதியை சுத்தம் செய்ய பல் துலக்கும் பிரஷ் இருந்தால் பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு முறை மிக்ஸி பயன்படுத்தும் போதும் அடிப்பாகத்தில் ஈரம் தங்காமல் சுத்தமாக துடைத்து எடுங்கள்.
ஜாரின் அடிப்புறம் தண்ணீர் இருக்கிறதா, ஈரம் இருக்கிறதா என்பதை யெல்லாம் கவனியுங்கள்.
ஈரப்பதமான பொருட்களை அரைக்கும் போது, உதாரணத்திற்கு சட்னி அரைக்கும் போது அடியில் மீதம் தங்கியிருக்கும் .
மத்திய அரசின் அருமையான அசத்தல் திட்டம்... இலவச மருத்துவம் !
அதை அகற்ற இறுதியா மீண்டும் தண்ணீர் ஊற்றி அரைத்தால் அவை வெளியேறி விடும். இதனால் மிக்ஸி துர்நாற்றம் வீசாது.
மாதம் ஒரு முறையேனும் சுற்றிலும் பல் துலக்கும் பிரெஷ் கொண்டு தேய்த்துத் துடைப்பது அவசியம். தண்ணீரை ஊற்றி ஊற்றி துடைத்து விடாதீர்கள். மோட்டாருக்குள் நீர் புகுந்தால் பழுதாகி விடும்.
Thanks for Your Comments