ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், தனது காதலியுடன் உடலுறவில் இருந்தார். அப்போது, கேமிராவை அவர் ஆஃப் செய்ய மறந்து விட்டார்.
கொரோனா தொற்றுநோய்க்கு நடுவில், மக்கள் முழுமையாக வீட்டுக் குள்ளேயே வாழும் வாழ்க்கை முறையில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர்.
அலுவலகங்கள் ‘WorkFromHome' என்ற முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு மூலமே தொடர்ந்து வருகிறது.
இதனால், பல விநோதமான சம்பவங்களும் நடைபெறுகிறது. அப்படி ஒரு வினோத சம்பவம் வியட்நாமில் ஒன்று அரங்கேறியுள்ளது.
ஆன்லைன் வகுப்பின் போது, கல்லூரி மாணவர் ஒருவர் பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டார். இந்த வினோதமான சம்பவம் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றுள்ளது.
அதை பார்த்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது. அதன் பிறகு நடந்தது என்ன?
COVID-19 தொற்றுநோயின் அலைகளில் தத்தளிக்கும் உலகத்தின் இயல்பு வாழ்க்கை மாறி விட்டது.
அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது கல்வி. சிறு குழந்தைகள் முதல் பட்டப் படிப்பு வரை அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் ஆன்லைனுக்கு மாறிவிட்டது.
இந்த புதுவித கற்பிக்கும் விதம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், வினோதமான மற்றும் வித்தியாசமான அனுபவங்களையும் தருகிறது.
அவை நம் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் போது நிச்சயமாக அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
அண்மையில் வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் (Ho Chi Minh city of Vietnam) சேர்ந்த ஒரு மாணவர், ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது
தனது கூட்டாளருடன் உடலுறவு கொள்ளும் போது கேமராவை அணைக்க மறந்து விட்டதால் அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து விட்டார்.
இந்த சம்பவத்தால் மாணவர் மீது கோபமடைந்த பேராசிரியர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேரடியாக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆன்லைன் வகுப்பில் இருக்கிறோம், நீங்கள் உடலுறவு கொள்கிறீர்கள்” என்று சீற்றத்துடன் கத்தியதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பேராசிரியரின் கோபமான வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான், தனது தவறை உணர்ந்துக் கொண்ட மாணவர், உடனடியாக ஆடையால் உடலை மறைத்துக் கொண்டு, நொடிப் பொழுதுக்குள் கேமராவை அணைத்தார்.
பல்கலைக்கழகமும் இந்த சம்பவத்தை உறுதிப் படுத்தியதுடன், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் போது
சரியான ஒழுக்கத்தையும் பொருத்தமான நடத்தையையும் கடைப்பிடிக்குமாறு மாணவர்களுக்கு நினைவூட்டியது.
மேலும் மாணவரின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, இணையத்தில் பரவும் வீடியோவை பகிர வேண்டாம் என்று அவர்கள் மக்களை வலியுறுத்தினர்.
Thanks for Your Comments