கொரோனா மூன்றாம் அலை‌ முன்னெச்சரிக்கை !

2 minute read
0

இந்தியாவில் இரண்டாம் அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் மீண்டும் உருமாறி டெல்டா ப்ளஸ்ஸாக உருவெடுத்துள்ளது. 

கொரோனா மூன்றாம் அலை‌ முன்னெச்சரிக்கை !
டெல்டா ப்ளஸ் பல்வேறு நாடுகளில் தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் டெல்டா வகை வைரஸ்களால் சமூகப் பரவல் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

ஆயுர்வேதம் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும் என்ன? இத படிங்க ! 

தடுப்பூசி போடாதவர்களை இந்த வைரஸ் தாக்கியே தீரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரிட்டன் உள்ளிட்ட 85 நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பரவியுள்ளது.

0 முதல் 20 வயது குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

1. குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும்.

2. வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும்.

குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும்

3. குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.

மைதாவில் கலக்கப்படும் பென்சாயில் பெராக்சைடு நன்மையும் தீமையும் ! 

4. ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வைக்க வேண்டும்.

5. கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வைக்க வேண்டும்.

6. குழந்தைகள் தங்களுடைய மூக்கு, வாய், கண் ஆகியவற்றை கைகளை சுத்தம் செய்யாமல் தொட விட வேண்டாம்.

 7.பெரியவர்களை கைகளை கழுவாமல் குழந்தைகளை தொட அனுமதிக்க வேண்டாம்.

8.குழந்தைகள் உபயோகிக்கும் கைபேசி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

9. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட வைக்க வேண்டும்.

10. தினமும் வீடு மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

11. தினமும் பாய் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்து தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.

12. மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும்.

அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?

13. பொதுவான‌ பல் துலக்கிகளை உபயோகிக்க வேண்டாம்.

14. தனிமனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவும் முறைகளை கற்றுக் கொடுங்கள்.

உணவு முறைகள்

15. கைகுலுக்குவது, முத்தமிடுவது மற்றும் மற்ற எந்த வித முறையிலும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நடக்கும்?

உணவு முறைகள் 

1. ஒரு நாளைக்கு இரண்டு முட்டை.

2.  அவித்த அல்லது ஊறவைத்த பருப்பு வகைகள்.

3. தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும்.

4. பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள்.

இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள்.

தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

கடையில் வாங்கும் தின்பண்டங்களை தவிர்த்துவிடுங்கள். மூன்றாம் அலையின் அறிகுறிகள்

1. காய்ச்சல் அல்லது தலைவலி.

2. உடல்வலி.

3. தொண்டை வலி.

4. வறட்டு இருமல். 

5. கால் வலி.

6. கண் வலி. இவைகளெல்லாம் அறிகுறிகள்.

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?

அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக காய்ச்சல் சரி பார்க்கும் தர்மா மீட்டர், பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஷு பேப்பர் வைத்திருக்க வேண்டும்.

உடனடியாக கொரோனா பரிசோதனை
பெற்றோர்கள், மேற்கண்ட அறிகுறிகள் எதேனும் தங்களின் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும். 

மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் செய்ய வேண்டுமா? படியுங்கள் !

செய்த பிறகு, பாஸ்டிவ் என்று வந்தால்  குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.- டாக்டர் சுமதிராஜா

பொதுவாக வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அப்படி உருமாறும் சில வைரஸ்களின் செயல்பாட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாக்குவதில்லை. 

ஆனால், சில உருமாற்றம் அவற்றின் செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும். 

குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் போதும் அதைக் கண்டறிவதற்காக Variant of Interest, Variant of Concern, Variant of High Consequence என்று 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது.

தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

உருமாற்றம் நடைபெறும் போது குறிப்பிட்ட எந்த விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும், உருமாற்றம் அடைந்த எந்த வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் 

என்பதை இதை வைத்துக் கணிப்பார்கள். நோய் தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று கணிக்கக்கூடியது Variant of Interest.

கொரோனா மூன்றாம் அலை‌ முன்னெச்சரிக்கை !

பரவும் தன்மை, தீவிரத் தன்மை அதிகமாக இருக்கும் என்பதை ஓரளவு ஊர்ஜிதப்படுத்த முடியும் என்பது Variant of Concern, 

கண்டிப்பாகத் தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் கட்டுப்படாது என்பதைக் குறிப்பது Variant of High Consequence

தீபாவளி பண்டிகைக்கு காஜூ ஆப்பிள் செய்வது எப்படி? 

அந்த வகையில் டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸை உலக சுகாதார நிறுவனம் Variant of Concern என்று அறிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 3, April 2025
Privacy and cookie settings