ஆடு, மாடு, கோழி, மீன் என வித்யாசமான முறையில் சீர் கொடுத்த மாமனார் !

0

1000 கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என டன் கணக்கில் சீர் கொடுத்து மருமகனை மாமனார் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆடு, மாடு, கோழி, மீன் என வித்யாசமான முறையில் சீர் கொடுத்த மாமனார்  !
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் பொனாலு என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள். 

இந்த விழாவில் மணமான மகள்களுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம். தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடி மாத சீர்வரிசையை பரிசாக வழங்குவர்.

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்தில் ஆஷாதம் விழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

ஆடு, மாடு, கோழி, மீன் என வித்யாசமான முறையில் சீர் கொடுத்த மாமனார்  !

ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜ முந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.

தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்சசி அடைந்த பலராம கிருஷ்ணன் 1000 கிலோ மீன்கள், 

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்

200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 250 கிலோ மளிகைப்  பொருட்கள், 250 வகையான ஊறுகாய், ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என 

வண்டி வண்டியாக சீர்வரிசையை மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

ஆடு, மாடு, கோழி, மீன் என வித்யாசமான முறையில் சீர் கொடுத்த மாமனார்  !

தங்களது மகளை மிகவும் அன்புடன் மருமகன் கவனித்து வருவதால் எங்கள் அன்பை காட்டும் விதமாக சீர் செய்துள்ளோம்.. 
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்

இனிப்பு, காரம், சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,

மளிகை பொருட்கள் என வாரி வழங்கியுள்ளோம் என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் வித்தியாசமான மாமனார் பலராம கிருஷ்ணா..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings