திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதற்காக பல மாதங்கள் திட்டமிட்டு, அதை தங்கள் வாழ்வின் மறக்காத தருணமாக மாற்ற மணமக்கள் பாடுபடுவார்கள்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் திருமண மேடையில் தூங்குகிறார்.
அருகில் உள்ள மணமகள் வருத்தத்துடனும் சோகமாகவும் கோபமாகவும் காணப்படுகிறார். இதற்கு கூட கோபம் வராவிட்டால் எப்படி?
பாவம் கொஞ்சம் நேரம் மணமேடையில் தூங்கிய மணமகனின் நிலைமை என்னவாகிறதோ என்று சமூக ஊடகங்களில் பலர் கிண்டல் செய்திருந்தாலும், இதில் ஆழமான உணர்வு பிணைப்புகள் இருக்கின்றன.
காலை நேரத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இன்னும் சற்று நேரம் உறங்க மனம் ஏங்கும்.
கடுமையான வேலைகளுக்கு நடுவில் மதியத்தில் உணவு உண்ட பிறகு கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று மனம் கெஞ்சும்.
ஆனால் திருமண மேடையில் தூங்கி விடாதே என்று யாராவது இதுவரை அறிவுரை சொல்லியிருப்பார்களா?
இந்த வீடியோவை பார்த்த பிறகு, இனிமேல் கட்டாயம் அந்த அறிவுரையை அனைவரும் மணமக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இந்திய திருமணங்கள் வேடிக்கையும், கிண்டலும், கலாட்டாவும் என மகிழ்ச்சியாக இருக்கும்.
அதற்கிடையிலும் மணமேடையில் ஒரு மணமகன் தூங்குகிறார் என்றால் பாவம் அவர் எவ்வளவு சோர்வாக இருந்திருப்பார் என யாரும் அவருக்கு பாவப்பட மாட்டார்கள்.
அனைவரும் அவரை மேலும் நையாண்டி செய்கிறார்கள். இதைப் பார்க்கும் மணமகளுக்கு வருத்தமும் கோபமும் வந்தாலும் அதை காட்டும் இடம் இல்லை என்று பொறுமையாக இருக்கிறார்.
Thanks for Your Comments