நடிகர் முகேஷ் மற்றும் அவரது மனைவி மெத்தில் தேவிகா இருவருக்கும் தற்போது விவாகாரத்து ஆகியுள்ளது.
மலையாளத்தில் இவர் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். அதோடு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் நடந்தது. பின்னர் கடந்த 2011-ல் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதற்குக் காரணமாக, முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013-ல் முகேஷ் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு வயது 64.
தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
அதில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியில் இருந்து அழைப்பதாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பேசினார். ஓர் அவசர தேவைக்காக அழைப்பதாகவும் கூறினார்.
ஆனால் அந்த மாணவியை பேச விடாத நடிகர் முகேஷ், "நீ ஆறு முறை அழைத்திருக்கிறாய். நான் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தேன்.
எதற்காக திரும்பத் திரும்ப அழைக்கிறாய். வேறு தொகுதியில் இருந்து அதிலும் மற்றொரு மாவட்ட எம்.எல்.ஏ-வை எதற்காக அழைக்கிறாய்? உன் தொகுதி எம்.எல்.ஏ உயிரோடு தானே இருக்கிறார்.
பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் எம்.எல்.ஏ யார் என்று உனக்கு தெரியுமா?" என ஆவேசமாக கேட்டார் நடிகர் முகேஷ்.உன்னை நான் நேரில் பார்த்தால் துடைப்பத்தால் அடித்து விடுவேன்" என ஆவேசமாக பேசினார். நடிகர் முகேசின் இந்த ஆடியோ வைரலாக பரவியது.
இதையடுத்து இது பற்றி கருத்து தெரிவித்த ஒற்றப்பாலம் சி.பி.எம் எம்.எல்.ஏ பிரேம்குமார், "அது நடிகர் முகேசின் குரல்தானா எனத் தெரியவில்லை.
நான் முகேஷுக்கு தொடர்பு கொண்ட போதும் கிடைக்கவில்லை" என்றார்.
இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட நடிகர் முகேஷ், "சிலரின் தூண்டுதலின் பேரில் இது போன்று பல குழந்தைகள் போனில் அழைக்கிறார்கள்.
என்னை போனில் அழைப்பவர்கள் பற்றி கொல்லம் போலீஸ் கமிஷனரிடமும், சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளிக்க உள்ளேன்" எனக் கூறியிருந்தார்.
போன் உரையாடல் சர்ச்சை முடிவடைவதற்குள் நடிகர் முகேசுக்கு அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்நிலையில் முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் மணமுறிவு ஏற்பட்டுள்ளது.
மேதில் தேவிகா நடிகர் முகேசை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலையாள மீடியாக்களிடம் பேசிய மேதில் தேவிகா, "முகேஷ் நல்ல மனிதர். அன்பு காட்டுவதில் சிறந்தவர்.
ஆனால் வாழ்க்கையில் நல்ல கணவராக இருக்கவில்லை. குடும்ப வாழ்க்கையை நல்லபடியாக கொண்டு செல்ல முடியவில்லை.
எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
"இப்போது வெளியாகும் செய்திகள் உண்மை என்றால் முகேஷ் மீது பாலியல் தொல்லை வழக்கு பதிவு செய்ய காவல்துறை தயாராக வேண்டும்.
மக்கள் பிரதிநிதியான முகேசுக்கு எதிராக பெண்கள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் முகேஷ் விவகாரங்கள் கேரளத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
Thanks for Your Comments