பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

0

அழகு என்பது ஒருவரின் தோற்றத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளாத சில பேர் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களிலும் பொது இடங்களிலும் மற்றவர்களை விமர்சித்து வருகின்றனர். 

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !
நம்மில் பலரும் நல்ல தடகள வீரர்களைப் போல உடல்வாகு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்.

ஆனால் அப்படிப்பட்ட உடல்வாகு கொண்ட நீச்சல் விளையாட்டு வீராங்கணைகளான கேட் ஷார்ட்மென் மற்றும் இஸ்ஸி தோர்ப் ஆகியோர் தங்கள் உடல்வாகு சார்ந்து மோசமான விமர்சனங்களை எதிர் கொள்கின்றனர்.

நீச்சல் விளையாட்டு வீராங்கனைகளான கேட் (19), ஷார்ட்மென் இஸ்ஸி (20) ஆகிய இருவரும் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 

ஒலிம்பிக் போட்டியில் ஆர்ட்டிஸ்டிக் ஸ்விம்மிங் என்கிற விளையாட்டில் பிரிட்டன் சார்பாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் விளம்பர கம்பெனி ஒன்றிற்கு இவர்கள் போஸ் கொடுத்து இருப்பதைப் பார்த்து ரசிர்கள் சிலர் “உங்களுடைய மார்பகம் பெரிதாக இல்லை“ என்றொரு மோசமான விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர்.

இன்னும் சிலர் உங்களுக்கு பெரிய தோள் பட்டைகள், சிறிய மார்பகம், சிறிய புட்டம் இருக்கிறது என்று 

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை

தங்கள் உடல் குறித்து விமர்சிக்கப் படுவதாக கேட் மற்றும் இஸ்ஸி இருவரும் கூறுகின்றனர். 

இந்த விமர்சனங்கள் குறித்து கருத்து பதிவு செய்து இருக்கும் கேட் மற்றும் இஸ்ஸி ஆகிய இருவரும் பொதுவாக தடகள வீரர்களுக்கு அவர்கள் செய்யும் பயிற்சி காரணமாக பெரிய தோள்பட்டைகள் இருப்பது இயல்பு. கூடவே 

ஒரு வாரத்தில் 40 மணி நேரம் நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது இயற்கையாகவே உங்கள் உடல்வாகு மாறிவிடும் என்கிறார் இஸ்ஸி.. 

இதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம தவிர வெட்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சிகள், அதிவேக நீச்சல், பளு தூக்குதல், நடனம், ஜிம்னாஸ்டிக் என பல்வேறு பயிற்சிகளால் அவர்களின் உடல்கள் விளையாட்டுக்கு பக்குவப்பட்டு இருக்கின்றன.

ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

மேலும் இது போன்ற விமர்சனங்களைப் பார்த்து எந்தப் பெண்ணும் வெட்கப்படவோ, வேதனைப்படவோ கூடாது எனவும், 

எங்கள் உடல்வாகு குறித்து நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் எனக் கூறியிருக்கும் கேட் மற்றும் இஸ்ஸி ஆகிய இருவரும் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஆண் தன்மையோடு தோற்றமளிக்கிறீர்கள் என தங்களைப் பார்த்து பலமுறை கூறியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் இந்த ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள்.

பொதுவாகவே நீச்சல் வீரர்களுக்கு தோள்பட்டைகள் மிகப் பெரிதாக இருக்கும். நான் சிறுவயதிலேயே என் தோள்பட்டையை மறைக்கும் விதத்தில் ஆடைகளை அணிந்து கொள்வேன். 

தளர்வான ஆடைகளை அணிந்து கொண்டால் என் பெரிய தோள்பட்டைகள் அதிக கவனம் ஈர்க்காது என்கிறார் இஸ்ஸி.

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை வீராங்கனைகள் உருக்கம் !

நான் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்கிறேன் என்றால், எதிர் மறையான கருத்துக்கள் வராத அளவுக்கு படத்தை சரி செய்து பதிவிடுவேன்.

உடல்வாகு சார்ந்த விமர்சனங்கள் பள்ளி மற்றும் பயிற்சி அரங்கிலும் எழுந்தன. 

பொது நீச்சல் குளங்களுக்கு வரும் மக்கள் 'உங்கள் ஆடையை சரி செய்து கொள்ள முடியுமா' என கூறுவார்கள் என்கிறார் கேட்..

நாங்களும் எல்லோரைப் போல தான் ஆடை உடுத்துவோம். எங்கள் உடல் வாகு காரணமாக, அணியும் ஆடை இடுப்புப் பகுதியில் சற்று உயரமாக பொருந்திக் கொள்ளும்.

ஆண்கள் ஸ்பீடோஸ் என்றழைக்கப்படும் உள்ளாடையோடு நடந்து வந்தால் பரவாயில்லை, 

ஆனால் பெண்கள் தங்கள் உடலை வெளிக்காட்டும் விதத்தில் ஆடை அணிந்தால் அது தவறாகப் பார்க்கப்படுகிறது. இது கேலிக்குரியது என்கிறார் கேட்.

கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

ஒலிம்பிக் வீராங்கணையான இவர்கள், இந்த விமர்சனங்களோடு வாழவும், தங்கள் உடல்வாகை பெருமையாக ஏற்றுக் கொள்ளவும் பழகிக் கொண்டார்கள்.

நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் காணப்பட வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை என்கிறார் இஸ்ஸி.

பிரிஸ்டலைச் சேர்ந்த இருவரும் பிரிட்டனைச் சேர்ந்த ப்ளூபெல்லா என்கிற உள்ளாடை நிறுவனத்தின் அழகு சாதன பிரசாரம் ஒன்றில் ஈடுபட்டடார்கள். 

பெண்கள் மேம்பாட்டுக்கு உள்ளாடை ஃபோட்டோ ஷூட் உதவுமா என கேள்வி எழுப்பலாம். 

அதற்கு, தங்கள் உடல்வாகு குறித்து எந்த பெண்ணும் வெட்கப்படவோ வேதனைப்படவோ கூடாது என்கிறார்கள் அப்பெண்கள்.

எங்களை பலரும் விமர்சித்தார்கள், ஆனால் இப்போது கொஞ்சம் உடல் தெரியும் ஆடைகளோடு புகைப்படங்கள் எடுக்க முடியும் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்கிறார் கேட்.

மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு மட்டுமே உடல் வாகு குறித்த பிரச்சனைகள் இல்லை. 

பெரிய மார்பகத்துடன் கவர்ச்சியாக இல்லை.. ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் உருக்கம் !

விளையாட்டு வீரர்கள் போன்ற உடல் வாகு கொண்டவர்கள், பெரிய உருவம் கொண்டவர்கள், சிறிய உருவம் கொண்டவர்கள் என பலருக்கும் இருக்கிறது.

தங்கள் உடல் குறித்த நம்பிக்கையின்மையால், விளையாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு உதவ விரும்புகிறார்கள் இந்த வீராங்கனைகள். 

எல்லா வயது வரம்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களை விட அதிக அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள் என சமீபத்தைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

14 - 16 வயதுக்கு உட்பட்ட பெண்களில், சுமார் 35 சதவீதத்தினர் நம்பிக்கை யின்மையால் விளையாட்டுகளில் பங்கெடுப்பதில்லை என்கிறார்கள்.

பிரிட்டனில் தேசிய அளவில் இந்த பிரச்சனையை எதிர் கொள்ள பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

உதாரணமாக ஸ்போர்ட் இங்கிலாந்தின் #thisgirlcan என்கிற முன்னெடுப்பு, வலிமையாகவும் வியர்வையோடும் இருக்கும் தோற்றம் குறித்த பொது விழுமியங்களை உடைத்தெறிய முயல்கிறது.

இஸ்ஸி மற்றும் கேட் இருவரையும் தற்போது விமர்சனங்களால் தடுத்து நிறுத்த முடியாது. 

இந்த இருவரும் தற்போது ஜப்பானில் நடக்க விருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்கள்.

நாங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இது எங்கள் கனவு, எந்த ஒரு விஷயத்தாலும் அதை தடுக்க முடியாது என்கிறார் இஸ்ஸி.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings