மத்திய ஆப்பிரிக்காவில் கேமரூன் (Camaroon) என்ற ஒரு நாடு உள்ளது. அந்த நாட்டில் நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்தை பற்றி இங்கு பார்ப்போம்.
கேமரூன்கேமரூன் என்ற நாட்டில் நையொஸ் (Nyos) என்ற ஒரு மிகப்பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியை சுற்றி பல கிராமங்கள் உள்ளது.
சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக 21ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1986 ஆம் ஆண்டு இரவு 9 மணி இருக்கும்.
நையொஸ் ஏரிக்கரைக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு எதிர்பாராத விதமாக திடீரென்று மூச்சு திணற ஆரம்பிக்கிறது.
அந்த நேரம் மக்கள் பலரும் தூங்கச் சென்ற நேரம். நிமிடத்திற்கு நிமிடம் மூச்சு திணற ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பலரும் தூக்கத்தில் இருந்ததால் மூச்சுத்திணறலால் எந்திரிக்க முடியவில்லை.
தூக்கத்தில் இருந்து கண் விழித்த சிலரும் என்ன நடக்குதுனு புரியாமல் திணற ஆரம்பித்தார்கள்.
ஆனால் அதுக்கு அப்பறம் தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பித்தது.
திடீரென்று மூச்சு தினற ஆரம்பித்ததால் தெனறி போய் இருந்த அவர்களில் சிலருக்கு மூக்கு, வாய் வழியாகவும் இரத்தம் கசிய ஆரம்பித்தது.
மூச்சு திணறலால் இரத்தம் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த நிலை தொடர்ந்ததால் திடீர் என்று ஒவ்வொருவராக மயங்கி கீழே விழ ஆரம்பித்தார்கள்.
சிலர் மூச்சை விட முடியாத பயத்தில் அங்கும், இங்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் ஓட ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் மூச்சு மட்டும் அவர்களால் விட முடியவில்லை.
மூச்சு தினற ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து எல்லோரும் மயங்கினாலும் சரியாக மூன்று மணி நேரம் கழித்து தான் இந்தப் பிரச்சனையே கட்டுக்குள் வருகிறது.
ஆனால் அதுக்குள் பலர் மயக்கத்திலேயே இறந்து போகிறார்கள். சிலர் மூளையில் வெடிப்பு ஏற்பட்டு துடிதுடித்து இறந்து போகிறார்கள்.
இதில் இருந்து சிலர் மட்டும் தப்பி பிழைத்து கண் விழிக்கிறார்கள்.இது என்ன? ஏன் இப்படி நடக்கிறது? என்று யாருக்கும் புரியவில்லை.
இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவு என்பதால் பலரும் இருளில் நடப்பது என்னவென்றே தெரியாமல் அழ ஆரம்பித்தார்கள்.
பலர் உறவினர்களையும், குடும்பத்தினர்களையும் இழந்து கதற ஆரம்பித்தார்கள் ஏன் இப்படி நடந்தது?
நம்மை சுற்றி என்ன நடக்குது? என்று அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இந்நிலையில் தான் காலை விடிந்ததும் இந்த செய்தி மற்ற கிராமங்களுக்கும் பரவியது.
அப்பொழுது தான் அந்த கிராம மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது.
இந்த சம்பவம் அவர்களுடய கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை அவர்களை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டருக்கு உட்பட்ட கிராமங்களிலும் இதன் தாக்கம் தெரிந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் ஏன் பூச்சியினங்கள் கூட அங்கும் இங்குமாக செத்து கிடந்தது.
இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய பல விஞ்ஞானிகளை ஆய்வு செய்ய அக்கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
முதலில் எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு பலரும் மூக்கு,வாய் வழியாக ரத்தம் வந்து தான் இறந்து போனார்கள் என்பதால் மூளைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் செல்லாத நிலை இருந்தால் தான் இப்படி மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வரும் என்று யூகிக்கிறார்கள்.
அதனால் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்கிறார்கள். பிரேத பிரிசோதனைக்கு பின் தான் ஆக்ஸிஜன் இல்லாமல் தான் இறந்தார்கள் என்று உறுதி ஆகிறது.
அதன் பின் அங்கு உயிருடன் இருப்பவர்களிடமும் நடந்தவற்றை விசாரித்தார்கள். அதன் பிறகு தான் இவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வருகிறார்கள்.
அதாவது காற்று மண்டலத்தில் பிராணவாயு O2 வின் அளவு குறைந்துள்ளது என்று.
பின்னர் எப்படி காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடய அளவு குறைந்தது என்று ஆய்வு செய்கின்றனர்.
காற்றில் பிராணவாயு குறைவதற்கு காரணம் காற்றில் அதிகமாக கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்திருக்கலாம் என யூகிக்கிறார்கள்.
பின்னர் முழுவீச்சில் அந்த பகுதியை ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு அங்குள்ள ஒவ்வொரு கிராமத்தையும் ஆய்வு செய்கின்றனர்.
இவ்வாறு ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது தான் அவர்களுக்கு ஒரு விடயம் தெரியவருகிறது.
அது என்னவென்றால் அங்கு இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு நீர் ஆதாரமாக திகழ்வது ஒரே ஒரு ஏரி தான் என்று. அந்த ஏரியின் பெயர் தான் நையொஸ் (Nyos).
பின்னர் அந்த ஏரியையும் ஆய்வு செய்கின்றனர். பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் அந்த ஏரியிலிருந்து தான் CO2 வெளியேறியிருக்க வேண்டும் என்று.
பின்னர் நடந்த ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. ஆனால் CO2 எப்படி இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டது என மீண்டும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள்.
அதனால் அவர்கள் ஏரிக்குள்ளே அடிப்பகுதிக்கு சென்று ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏரியினுள்ளே எந்த மாற்றமும் தென்படவில்லை.
அந்த ஏரியின் அடிப்பகுதி பழைய நிலையிலேயே இருந்தது.
இப்படி இருக்கையில் எவ்வாறு நையொஸ் ஏரியிலிருந்து பல மடங்கு CO2 வாயு வெளியேறியது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
ஆனால் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை வைத்து கணக்கிட்டால் சம்பவத்தின் போது CO2 வாயுவானது ஏரி மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்திற்கும் மேல்
குறைந்தது 3 இலட்சம் டன் முதல் அதிகபட்சம் 16 இலட்சம் டன் அடர்த்தியான CO2 வானது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வெளியேறி கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கலந்து பரவி இருக்க வேண்டும்.
அவ்வளவு CO2 வும் ஒரே நேரத்தில் வெளியேறி இருந்தால் ஏரியிலுள்ள தண்ணீரெல்லாம் பெரும் சப்தத்துடன் குறைந்தது 90 அடி உயரத்திற்காவது
ஒரு குட்டி சுனாமி போல் சிதறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிலர் ஏரிக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு இவ்வாறு CO2 வாயு காற்றில் கலந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் மர்ம நபர்களால் (தீவிரவாதிகள்) காற்றில் விஷவாயுவை கலந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
ஆனால் இதில் எதுவுமே உறிதிப் படுத்தப்படவில்லை.
இறுதியாக அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் நியொஸ் ஏரியிலிருந்து மர்மமான முறையில் வெளியான
பன்மடங்கு CO2 வாயுவால் 1746 மனிதர்களும், 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிர் இழந்தன என்று பதிவு செய்தனர்.
இத்தனை மரணங்களும் சில நிமிடங்களில் நிகழ்ந்தவையே.
இந்த கார்பன் - டை - ஆக்ஸைடு எப்படி காற்றில் கலந்திருக்கும்?
இதற்கான அறிவியல் காரணத்தை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என்ற கேள்விக்கு எதற்குமே இன்று வரை பதிலில்லை.
இந்த பெறும் விபத்துக்கான காரணம் தீராத மர்மமாகவே உள்ளது
Thanks for Your Comments