பாம்புகளுக்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட பினாங்கு கோவில் !

0

மலேசிய நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக விளங்குவது பினாங்கு தீவு ஆகும். மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி, 305 சதுர கி.மீ. பரப்புள்ளது. 

பாம்புகளுக்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட பினாங்கு கோவில் !

இங்கு 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். 

மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. 

மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்து விடுகிறோம். 

இது பழமையான கோவில் மட்டுமல்ல... பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவிலும் கூட.சீனக் கட்டட அமைப்பை ஒத்த இந்தக் கோவில் 18ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள்.

சூர் சோ காங் மன்னர் 

சூர் சோ காங் மன்னர்

தனது 65 வது வயதில் மன்னர் இறந்து விட சூர் சோ காங் என்ற இந்த மன்னரின் நினைவாக இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். இந்த பாம்புக் கோவில் ஆரம்பத்தில் ஒரு கோட்டையாகவே கட்டப்பட்டுள்ளது. 

ஆனால் பாம்புகள் இங்கு தானாகப் படையெடுத்து வந்ததால் இது பாம்புக் கோவிலாக மாறியுள்ளது. காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் பேராதரவு காட்டியவர்.  

அவர் வசித்த அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

இப்படி பாம்புகளுடன் அதிகமாக பொழுதைக் கழித்த காங் மன்னர், 65ம் வயதில் இறந்து விட்டார். 

அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இதை நிர்மாணித்தவர் ஒரு புத்த துறவி என்பது வியப்பளிக்கும் செய்தி.

பாம்புக் கோயில் 

பாம்புக் கோயில்

முதலில் ‘காங் கோட்டை’யாகத் திகழ்ந்த இந்தத் தலம், அடுத்தடுத்து பாம்புகள் படையெடுக்கவே, பாம்புக் கோயிலாக பெயர் மாற்றம் பெற்று விட்டது. 

அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். 

இதனால் கோயில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன. பாம்புகளுக்கு நடுவில் வழிபாடா என்று கேட்காதீர்கள். 

வழிபடும் போது பாம்புகள் உங்களை நோக்கி ஊர்ந்து வந்தால் தான், வழிபாடு முழுமை அடையுமாம். 

நினைத்த காரியம் கைகூடுமாம். ஆனால், பாம்புகள் எல்லா சமயங்களிலும் இப்படி வருவதில்லை. ஒரு சில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம்.

வி‌ஷப்பாம்புகள் 

வி‌ஷப்பாம்புகள்

கோயிலுக்கு பின்புறம் ஒரு குளம் இருக்கின்றது. இங்கு பல கொடிய விஷப் பாம்புகளைக் காணலாம். ஆனால் அனைத்தும் விஷம் நீக்கப்பட்டவை என்கிறார்கள்.

1950–ம் ஆண்டு வரை இந்தக் கோவிலில் வி‌ஷப்பாம்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது வி‌ஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இருக்கின்றன. 

இருப்பினும் பாம்பு கடித்து பக்தர்கள் இறந்த செய்தி பழைய வரலாற்றிலும் இல்லை. 

ஏன்.. இப்போதும் கூட பாம்புகள், பக்தர்களைப் பார்த்து கோபத்துடன் சீறியதாகவும் செய்தி இல்லை. அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

பாம்பு தூங்குவதற்கு

பாம்பு தூங்குவதற்கு

குளம், மரக்கிளை என கோயில் முழுவதும் பாம்புகள் படர்ந்திருந்தாலும், அவை தூங்குவதற்காக பிரத்யேக ஸ்டாண்ட் அமைப்புகளை கோயில் நிர்வாகம் அமைத்திருக்கிறது! 

இரும்புக் கம்பிகளை சுருள் வடிவில் வளைத்து, பாம்பு தூங்குவதற்குத் தோதான படுக்கையாக மாற்றி இருக்கிறார்கள்.

கோவிலை பாம்புகள் நிறைத்திருப்பது போல, புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. 

புத்தமத வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி கலாச்சாரம், பினாங்கு கோவிலிலும் பின்பற்றப்படுகிறது. 

அதனால் பாம்புகளுக்கு இணையாக புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. எந்நேரமும் கோவில் புகைமூட்டமாக இருப்பதால், பினாங்கு கோவிலை... ‘பினாங்கு வானம்’ என்றும் அழைக்கிறார்கள். 

இது தவிர ‘அசூர் மேகம் நிரம்பிய கோவில்’ என்றும் சிறப்பிக்கிறார்கள்.

ஆலயத்தின் திருவிழா

ஆலயத்தின் திருவிழா

பாம்புகள் பக்தர்களை கடிக்காமல் இருக்க, கோயில் நிர்வாகத்தினரே, ஊதுபத்திகளைப் பயன் படுத்துவதாகவும், அந்தப் புகையினால் பாம்புகள் மயங்கி கிடப்பதாகவும் ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள். 

ஆனாலும், இந்தப் பாம்புக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கிறது.

காங் மன்னரின் பிறந்தநாள், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். 

இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் வி‌ஷப் பாம்புகளும் குவிவது தான் ஆச்சரியம்.

பாம்புகள் நிறைந்திருக்கும் பாம்புக் கோயிலாக இருந்தாலும், அவற்றைத் தொடவோ, தூக்கவோ பக்தர்களை அனுமதிப்பதில்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings