பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?

0

ஆண்டு 1963, ஒரு துருக்கிய மனிதர் தனது வீட்டின் அடித்தளத்தை புதுப்பித்து வந்தார், அப்போது ஒரு விசித்திரமான பழைய கல் சுவரைக் கண்டதும், அத்தளத்தை அவர் உடனடியாக உடைத்தார்.

பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?
அவர் கண்டுபிடித்தது ஒரு பெரிய அடர்-கருப்பா சில்லுனு ஒரு வெற்றிடம், அந்த சுவரின் பின்னால் ஒரு குளிர்வான வெற்றிடம் இருந்தது. 

ஒரு தீப்பந்தத்துடன் ஆயுதம் ஏந்திய, துணிச்சலுடன், எங்கள் வீட்டு புனரமைப்பாளர் துளை வழியாக ஊர்ந்து சென்று 

எரிமலை அடிதளத்தில் செதுக்கப்பட்ட தொடர்ச்சியான பீப்பாய் போல கூரை உள்ள அறைகளைக் கண்டார்.

அகழ்வு 85 மீட்டர் ஆழம் வரை சென்று அந்த முதல் கண்ட மர்மமான அறைகள் உண்மையில் ஒரு சிறிய பகுதியே என்றும், 

உண்மையாக மக்கள் வாழ்ந்த பழங்கால தளம், 13 நிலைகளாலானது, ஒரு பெருநகரத்தின் பகுதியே அது என்றும் அறியப்பட்டது. 

ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !

மேலும், தனித்தனி பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதை பிணைக்கப்பட்ட பல கட்டிடங்கள் கிடைத்தன. 

சுரங்கப்பாதை பிணைக்கப்பட்ட கட்டிடங்கள்

இந்த பழங்கால இடம் 20,000 பேரை தங்க வைக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தது, ஒரு பெரிய மறைக்கப்பட்ட நிலத்தடி நகரம்.
உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?

நகரத்திற்கு நேரடியாக கீழே கிட்டத்தட்ட அள்ள, அள்ளக் குறையாத நீர் வளத்துடன் பரந்த நீர்நிலைகள் அல்லது

பூமிக்கு அடியில் உள்ள ஏரிகளுடன் இணைக்கப்பட்ட பல கிணறுகளுடன், ஒரு முழுமையான நகரம் கண்டெடுக்கப்பட்டது.

அருகிலுள்ள அறைகள் மற்றும் சுரங்கப் பாதைகளை ஆராய்ந்த பின்னர், எங்கள் புனரமைப்பாளர் ஒரு பெரிய அரைவைக் இயந்திரம் போன்ற ஒரு பெரிய வட்டக் கல்லால் தடுக்கப்பட்ட ஒரு குறுகிய பாதையை கண்டார். 

தயிருடன் சில உணவுகளை உண்ணக்கூடாது ஏன்?

இது பூமிக்கு அடியில் நகரம் சரிவதைத் தடுக்க தேவையென இந்த இடத்திற்கு உருட்டிக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது.

மறைக்கப்பட்ட நிலத்தடி நகரம்

கற்பனை செய்து பாருங்கள், உங்கள் வீட்டின் அடித்தளத்தை புதுப்பிக்க ஆரம்பிக்கையில், ஒரு வேளை உங்கள் தனிப்பட்ட குகையை உருவாக்க எண்ணி துவங்கிய நீங்கள், 
ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?

உங்கள் வீட்டின் அடியில் ஒரு பழங்கால நிலத்தடி நகரத்தை நீங்கள் கண்டுபிடித்தால் எப்படி இருக்கும்?

இந்த பிராந்தியத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பல பழங்கால நிலத்தடி நகரங்களில் இதுவும் ஒன்றாகும், கெய்மக்லி Kaymakli நிலத்தடி நகரம் மற்றொரு அருமையான எடுத்துக்காட்டு, 

டெரிங்குயு மற்றும் கெய்மக்லி Derinkuyu and Kaymakli ஆகியவை பல மைல் நீளமுள்ள நன்கு கட்டப்பட்ட சுரங்கப் பாதையால் இணைக்கப் பட்டுள்ளன.

குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !

இதன் சரியான வயது எதுவென நிறுவப்படவில்லை என்றாலும், இந்த பெரிய நிலத்தடி நகரங்கள் முதலில் குறைந்தது 2,800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. 

பெரிய நிலத்தடி நகரங்கள்

ஆனால் சாதுவான எரிமலை அடிவாரத்தில் உள்ள முதல் குகைகள் வெகு காலத்திற்கு முன்பே வசித்திருக்கலாம்.

நிச்சயமான விஷயம் என்ன வென்றால், இந்த நிலத்தடி நகரங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கலாச்சாரங்கள் வாழ்ந்தன. 

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

ஆரம்பகால இந்தோ - ஐரோப்பியர்கள், பின்னர் கிரேக்க மொழி பேசும் மக்கள், பின்னர் ரோமானியர்கள் இந்த நிலத்தடி நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டவர்கள், பின்னர் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இங்கு தஞ்சமடைந்தனர். 

அவர்கள் நகரத்தை விரிவுபடுத்தினர் மற்றும் நிலத்தடி தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் கூட கட்டினர்.

எரிமலை அடிவாரத்தில் உள்ள முதல் குகைகள்

பின்னர் பைசண்டைன் சாம்ராஜ்யத்தின் காலத்தில், இந்த இரண்டு நகரங்களும் மைல் கணக்கான சுரங்கப் பாதைகளால் இணைக்கப்பட்டு, 

மறைக்கப்பட்ட சமுதாயமாக வளர்ந்தது. முஸ்லிம் அரேபியர்கள் தொல்லை தந்த போது பல்லாயிரக் கணக்கானோருக்கு பாதுகாப்பான புகலிடமாகவிருந்தது.

கிரீன் வெஜிடபிள் ரைஸ் செய்வது எப்படி? 

பின்னர் மங்கோலிய மற்றும் ஸ்டெப்பி பழங்குடியினர் இந்த பகுதிகளை கொள்ளையடிக்க வந்த போது பரந்த மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரங்கள், 

அவர்களின் குதிரைகளின் குளம்புகளின் அடியில் நேர் கீழே உள்ளன என்று தெரியாது ஏமாந்து போயினர்.

பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?

பூமிக்கு அடியில் கட்டப்பட்ட இந்த விசித்திரமான பழங்கால நகரங்களில் சில 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டாலும், 

அவை அனைத்தும் கைவிடப்பட்டு அடுத்த நூற்றாண்டுகளில் மறக்கப்பட்டன என்ற சரித்திரம் இருந்தாலும், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, 

வெள்ளையை விட கருப்பு அரிசியே நல்லது ஏன் தெரியுமா?

இந்த நகரங்களில் சில, யூத மற்றும் கிறிஸ்தவ குழுக்களால் கொடூரமான துன்புறுத்தலின் போது, சரணாலயங்களாக பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன,

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings