கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை.
கிளிமஞ்சாரோ ஒரு ராட்சஸ பல அடுக்கு எரிமலை ஆகும். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கி வழிந்த எரிமலைக் குழம்பால் உருவான மலை இது.
இங்கு ஒரே மலையில் வேளாண் நிலம், மழைக் காடு, புதர்க் காடு, தரிசு நிலம், மலைப்பகுதியைச் சார்ந்த பாலைவனம், பனி முகடு என்று ஆறு விதமான நிலப்பரப்புகள் காணப்படுகின்றன.
இது உலகில் வேறெந்த பகுதியிலும் காணக் கிடைக்காத அதிசயம். மலையின் ஒவ்வொரு ஆயிரம் அடியிலும் ஒவ்வொரு வகை நிலப்பரப்பு காணப்படுகிறது.
மிக உயரத்தில் அழகாக இருக்கக்கூடிய கிளிமஞ்சாரோ மலையில் ஒரு விசித்திர அற்புதமான இங்கு மட்டுமே வளரக்கூடிய செடி இனம் ஒன்று உள்ளது. அதை பற்றிய தகவலை பார்ப்போம்.
டென்ட்ரோசெனெசியோ கிளிமஞ்சரி ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில்
நான்காயிரம் மீட்டர் அதாவது 13,000 அடி உயரத்தில் காணப்படும் ஜெயண்ட் கிரவுண்ட்ஸெல்ஸ் செடி (Giant Groundsel).
பார்ப்பதற்கு காற்றாழையை போல காணப்படும் இந்த செடி மிகவும் உயரமாக கிளைகளை கொண்டு அழகாக வளர்ந்து நிற்கிறது.
ஒரு குச்சியில் காய்ந்த செடியை செருகி வைத்து கொண்டையில் பச்சை இலைகளை சுற்றி அழகாக கட்டி வைத்திருப்பது போல வித்தியாசமாக நிற்கிறது இந்த செடி.
அங்குள்ள பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலையை தாங்கும் திறனும் கொண்டு இது தொடர்ந்து பரிணமித்து வருகிறது.
இந்த ஜெயண்ட் கிரவுண்ட்ஸெல்ஸ் கற்றாழையை போன்ற செடி டேன்டேலியன் குடும்பத்தை சேர்ந்தது.
இங்கு இந்த தாவரங்கள் சுமார் 1000 இருக்கலாம் என்கிறார்கள். மொத்தம் 30 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் உள்ளது
இந்த செடியினம். இந்தச் செடி இப்படி வித்தியாசமாக இருக்க காரணம் இந்த மலையின் மிக உயரமான இடத்தில் வளர்வதால் அங்குள்ள வெப்பநிலை இரவில் உறைபனிக்கு கீழே குறைந்து விடும்.
அப்படியே தண்டோடு சேர்த்து வைத்துக் கொண்டு தண்டுகளையும் செடியையும் பாதுகாக்கும் விதத்தில் வளர்கிறது.
இப்படி கருகிய இலைகள் செடியின் தண்டுடன் சேர்ந்திருப்பதால் எப்படிப்பட்ட மோசமான தட்பவெப்ப காலங்களிலும் அதனால் உயிர் தப்பிப் பிழைக்க முடியும்.
இப்படித்தான் பல மில்லியன் ஆண்டுகளாக தன்னுடைய இனத்தை பாதுகாத்து காப்பாற்றி வருகிறது.
மிக மோசமான குளிர்கால நிலைகளில் அதனுடைய இலைகள் கூட அப்படியே மூடி செடியை பாதுகாக்கிறது.
இப்படி இலைகள் மூடியிருப்பதால் தாவரத்தில் இருக்கக்கூடிய வெப்பம் வெளியேறுவது அதிக அளவில் குறைக்கப்படுகிறது.
இதனால் இந்த செடியால் நீண்ட காலம் தாக்குப் பிடித்து வாழமுடிகிறது. நமக்கு மட்டுமல்ல
அதனால் அதுவே திட்டம் போட்டு இப்படி ஒரு சூப்பரான ஒரு ஐடியாவை செயல்படுத்தி உயிர் வாழ்கிறது.
இந்த அழகான அபூர்வமான செடியை உங்களுக்கும் பார்க்க ஆசையாக இருக்கிறதா? அப்படியென்றால் ஒரு முறை அழகான கிளிமஞ்சாரோ மலைக்கு ஒரு ட்ரிப் அடித்து வாருங்கள்.
இது மட்டுமல்ல இன்னும் பல அற்புதமான விஷயங்கள் இந்த மலையில் உள்ளது.
Thanks for Your Comments