குளிக்காமல் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் !

0

தற்போதைய அவசர உலகில் குளிக்க கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. குளிக்கா விட்டால் பலரும் புத்துணர்ச்சியின்றி இருப்பார்கள். 

குளிக்காமல் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் !
அதோடு, வியர்வை துர்நாற்றமே நாம் குளிக்கவில்லை என்பதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டி விடும். 

அதிகமாக வேலை இருக்கும் போது மற்றும் அதிக குளிர்ச்சியாக இருக்கும் போது காலை நேரங்களில் குளிப்பதர்கு ரொம்ப சோம்பேறித்தனமாக இருக்கும். 

அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியே செல்லும் பொழுது குளித்து விட்டு செல்ல நேரம் கிடைக்காது.

ஆனால் குளிக்காமலேயே நன்கு புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க ஒரு சில ட்ரிக்ஸ்கள் உள்ளன. 

அந்த ட்ரிக்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் குளிக்காமலேயே குளித்து பிரஷ்ஷாக இருப்பது போல் காட்சியளிக்கலாம். 

குளிக்காமலேயே நன்கு புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க சில வழிமுறைகள் உள்ளன.

அந்த வழிமுறைகளை மட்டும் கைக்கொண்டால் குளிக்காமலேயே குளித்தது போல நம்மை ஜொலிக்க வைக்க முடியும். 

அது எப்படி முடியும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ரொம்ப ஈசி . 

இதில் இருக்கும் இந்த முறைகளை பின்பற்றினாலே போதும். குளிக்காமல் புத்துணர்ச்சியுடன் நம்மை இருக்க தூண்டும் சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

பலரும் குளித்த பின் தான் டியோடரண்ட் பயன்படுத்துகின்றனர். ஆனால் இரவில் படுக்கும் முன் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். 

அப்படி நாம் செய்யும் போது மறுநாள் காலையில் எழும் போதே வியர்வை ஸ்மெல் இல்லாமல் நல்ல புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடனும் இருக்கலாம்.

அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட வேண்டுமானால், ஹேண்ட் சானிடைசரை அக்குளில் பயன்படுத்துங்கள். 

இப்படி நாம் பயன்படுத்தும் போது குளிக்காமலேயே வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும். மேலும் ஸ்மெல் இல்லாமலும் இருக்கலாம்.

முக்கியமாக குளிக்காமலேயே புத்துணர்ச்சியுடன் இருக்க உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும்.

சிலர் வெளி உடைகளை மட்டும் மாற்றி விட்டு உள்ளாடைகளை மாற்றாமல் இருக்கின்றனர். அப்படி ஒரு போதும் செய்யக்கூடாது. 

குளிக்காமலேயே நாம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க உள்ளாடைகளை தவறாமல் மாற்றுங்கள்.

குளிக்காமல் புத்துணர்ச்சியுடன் இருக்க

கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் முழங்கை, மணிக்கட்டு, கழுத்து போன்ற இடங்களில் நல்ல நறுமண மிக்க பெர்ப்யூம்களை, பயன்படுத்துங்கள். 

இவைகளை ஆடைகளை அணியும் முன் செய்யுங்கள். இப்படி செய்தால் நாள் முழுவதும் நல்ல மணத்துடன் இருக்க முடியும்.

உடலில் வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க எலுமிச்சை மணம் கொண்ட க்ரீம்கள் அல்லது லோசன்களைப் பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் நறுமணமாக இருக்கலாம்.

நம்மைச் சுற்றி குளிக்காமலேயே ஒரு நல்ல நறுமணம் வீச வேண்டுமானால் தலை முடியில் ஈரமான பேபி துடைப்பான்களைக் கொண்டு தேய்த்தால் நல்ல மணம் வீசும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings