கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

0

சதுர வடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஅபா சதுர வடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் கஅபா என்ற பெயர் வந்திருக்கின்றது. 

கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப் பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். 

அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஅபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். 

உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. 

அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.

மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஅபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும் என்றும், 

அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 

சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு செய்முறை !

40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஅபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன” என்று 

நபிகளார் ஸல்லல்லாஹ { அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹஜ் மற்றும்  உம்ராவிற்கும் செல்லக் கூடியவர்கள் அனைவரும் தங்களது  தவாஃப் செய்த அனுபவத்தை பகிரும் போது

சுட்டெரிக்கும் வெயிலிலும் கஅபாவை சுற்றியுள்ள தரை மிகவும் குளிர்ச்சியானதாக இருக்கும் என்றுக் கூறுவார்கள்.

குளிர்ச்சியானதாக இருப்பது ஏன் ..?

குளிர்ச்சியானதாக இருப்பது ஏன் ..?

இந்த "வரலாற்றுப்  பின்னணியின் கதாநாயகன்  பொறியியல் கலையின் மிகப்பெரிய ஜாம்பவான் முஹம்மத் கமால் இஸ்மாயில் (ரஹ்)" அவர்கள் சிறிய வயதிலேயே 

மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்முறை !

தனது கல்விப் பயணத்தை தொடங்கிய இவர் கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு ஐரோப்பாவிற்கு சென்று 

இஸ்லாமிய கட்டிடக்கலை என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுகள் செய்து மூன்று முறை முனைவர் பட்டம் பெற்றவர். 

மக்காவின் சுட்டெரிக்கும் வெயில் தவாஃப் செய்யக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய சிரமமாக உணர்ந்ததையடுத்து இதற்கான தீர்வைத் தேடினார்.  

எவ்வளவு கடுமையான  வெயில் இருந்தாலும்  தவாஃப் செய்யக் கூடிய தரையில்  இருக்கக்கூடிய கற்கள்  குளிர்ச்சியாக  இருத்தல் வேண்டும் அப்படியானதொரு கற்களை தேடத் துவங்கினார்.

பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?

இப்படியான கற்கள் கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு சிறு மலையில் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. இந்த வகையான கற்களுக்கு  "தேசோஸ்" என்றுக் கூறுவார்கள். 

இந்தக் கற்களின் பிரத்தியேக குணாதிசியமானது "இரவின் ஈரப்பதத்தை தனது சிறிய துளைகளின் மூலம் உறிஞ்சு பகலிலே அந்த ஈரப்பதத்தை தன் மீது வெளிப்படுத்துமாம்".

கஅபாவை சுற்றியுள்ள வளாகத்தில் இந்த கற்களை பொருத்துவதற்காக  கிரேக்க நாட்டிற்குச் சென்று போதுமான அளவு வாங்க ஒப்பந்தம் செய்தார். 

கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

பாதி மலையே ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.  கஅபாவின் முழு தளத்திலும் பொருத்தப்பட்டது.

15 வருடங்களுக்குப் பிறகு சவுதி அரசாங்கம் இதேப் போன்ற கற்கள் மதீனாவிலும் பொருத்தப்பட வேண்டும் என்பதற்காக இவரை மீண்டும் தொடர்புக் கொண்டது. 

நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

அழைப்பை ஏற்று அவர் மீண்டும் கிரீஸ் நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டார்.

தொழிற்சாலைக்கு சென்றவருக்கு கிடைத்த பதில்  "நீங்கள் அந்தக் கற்களை வாங்கிய பிறகு சீக்கிரமே மீதமுள்ள கற்களும் விற்று விட்டது".

இதனைக் கேட்டதும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்தார் .சில நாட்களில் அவரது பயணத்தை மேற்கொள்ளத் தயாரான நேரத்தில்  யார் அதனை வாங்கியிருப்பார் 

அவரது முகவரியை கேட்போம் என்று அவருள்  கேள்விகள் உதித்து கொண்டே இருந்தது.

ஆனால் ஏன் இப்படியான கேள்விகள் அவரது  மனதிற்குள்  எழுந்தது என்று அவருக்கு புரியவில்லை.

உடனே அவர் மீண்டும் அந்த தொழிற்சாலையை தொடர்பு கொண்டு வாங்கியவரது  முகவரி  கிடைக்குமா என்று கேட்டார். 

துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

உடனே அவர்கள்  விற்று பல வருடங்களாகியதால்  முகவரியை கண்டறிவது கடினம் என்றார்கள். 

பிறகு  அவர் சவுதியை நோக்கி பயணத்திற்குத் தயாரான போது  திடீரென்று அவருக்கு தொழிற்சாலையிலிருந்து அழைப்பு வந்தது 

வாங்கிய நபருடைய முகவரி கிடைத்து விட்டது என்றும் அவர் சவுதியைச் சார்ந்தவர் என்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

உடனே சவுதிக்குச் சென்ற அந்த நபரை சந்தித்தார். கற்களைக் குறித்து விசாரித்தார். அதனை பயன்படுத்தி விட்டீர்களா என்று கேட்டார்..

"இல்லை"  என்றதும்.  நிம்மதி பெருமூச்சு விட்டபடி மதீனத்து பள்ளிக்கு  அந்த கற்கள் தேவை என்றதும்  எனது "அருமைத் தூதர் நபி (ஸல்) அவர்களது திருமஸ்ஜிதிற்கு அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள் 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

ஒரு திர்ஹமும் எனக்கு தேவையில்லை என்றுக் கூறி அத்துணை விலைமதிப்புள்ள கற்களையும்"  பொறியாளரிடம் ஒப்படைத்து விட்டார்......

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings