துபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நீச்சல் குளம் என்றாலே எல்லோர் மனதிலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு அலாதியான சுகத்தை தரக் கூடியது தண்ணீரில் நீந்திக் கடப்பது.
42 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையால் படுக்கையில் கிடந்த பெண்ணின் கதை !
அதிலும் 197 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் பல வகையான விஷயங்களை ரசித்துக் கொண்டே நீச்சல் அடிப்பது என்றால் கேட்கவா வேண்டும்...
அப்படி ஒரு ஆனந்தத்தை தருவதற்காகத் தான் துபாயின் டீப் டைவ் நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் துபாய் நாட் அல் ஷெபா பகுதியில் அமைந்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை குழுவால் புடைவிங்கிற்கான உலகின் ஆழமான நீச்சல் குளம் என சரிபார்க்கப்பட்டு உள்ளது.
இதனை துபாய் அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. சமீபத்திய நவீன தொழில்நுட்பத்தை கொண்டு டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நீச்சல் குளம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும். இதில் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும். அதாவது 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும்.
இது வெறும் நீச்சல் குளமாக மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட ஒரு அண்டர் வாட்டர் சுற்றுலா தளம் போலவே வடிவமைக்கப் பட்டுள்ளது.
42 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையால் படுக்கையில் கிடந்த பெண்ணின் கதை !
ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை இதில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த பகுதிக்கு ஹப்பர் பேரிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் பழைய பணிமனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்வதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் இதில், வசதி செய்து தரப்பட்டுள்ளது.
164 மின் விளக்குகள்
சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப்படுத்தும் 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தண்ணீருக்கடியில் 100 பேர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளையும் நடத்த வசதி உள்ளது.
மேலும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் எரிமலை பாறைகள் வழியாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இது நாசாவின் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. இதனால் நீரின் தூய்மைத் தன்மையைப் பற்றி சுற்றுலா வருபவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
நீச்சல்குள வளாகத்தில் பரிசுப் பொருட்கள் வாங்கும் கடை, நீச்சல் செய்வதற்கு உதவும் பொருட்களை விற்பனை செய்யும் கடை, கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைந்துள்ளது.
80 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான உணவகம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?
பட்டத்து இளவரசர் திறந்து வைத்தார்
இந்த ஆழமான நீச்சல் குளத்தின் அளவை கின்னஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் முத்து குளித்தல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தை
நேற்று துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார்.
காபி டீ அதிகமாக குடிப்பதில் என்ன தவறு என்கிறீர்களா? படியுங்கள் !
அவருடன் துபாய் ஊடக கவுன்சில் தலைவர் ஷேக் அகமது பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
வைரல் வீடியோ
நீச்சல் குளத்தின் வீடியோவையும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் உள்ள காட்சிகளைப் பார்த்து இணையவாசிகள் பிரமித்துப் போய் விட்டனர்.
சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
An entire world awaits you at Deep Dive Dubai the world’s deepest pool, with a depth of 60 meters (196 feet) #Dubai pic.twitter.com/GCQwxlW18N
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) July 7, 2021
Thanks for Your Comments