ஆப்கான் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறி விட்டன.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
அமெரிக்க தூதரக பணிகளுக்காக மட்டும் சில ஆயிரம் அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களையும் தாலிபான்கள் எனப்படும் இஸ்லாமிய கடும் கோட்பாட்டாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த தொற்றுநோய் தெரியுமா?
தலைநகர் காபூல், அதிபர் மாளிகை என அனைத்தும் இப்போது தாலிபான்கள் வசம். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல் பெரும்பாலான எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டனர்.
பொதுமக்களும் தாலிபான்கள் ஆட்சியில் வாழ முடியாது என்பதால் கிடைத்த விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக் கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளி நாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் மூடியதுடன் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தப்பட்டது.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
சில விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட்ட போது ரயிலில் ஏறுவது போல் விமானத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு மக்கள் ஏறும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி யுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் பாலம் இடிந்து விழும் காட்சி !
அப்போது கூடியிருந்த ஆப்கான் மக்கள் நூற்றுக் கணக்கானோர் விமானத்தை சூழ்ந்து கொண்டு ஏதேனும் ஒரு வழியில் உள்ளே இடம் பிடித்துவிட முடியாதா என போராடிப் பார்த்தனர்.
இதில் ஆப்கனில் இருந்து தப்பித்து செல்ல வேண்டும் என பலரும் விமானத்தின் ஓரப்பகுதி, டயர் பகுதியில் தொங்கியபடி சென்றுள்ளனர்.
ஆனாலும் அமெரிக்கா விமானியோ இத்தனை 100 பேர் ஒன்று திரண்டு வருவதையும் பொருட்படுத்தாமல் விமானத்தை இயக்கினார். அப்போது சிலர் விமானத்தின் டயரை பிடித்து தொங்கிய படியே பயணித்தனர்.
பசலைக் கீரை தோசை செய்வது எப்படி?
இந்த வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களை இப்போது ஆக்கிரமித்து இருக்கின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது.
அதில், தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடி வருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக ,
தலிபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிடுவதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
Thanks for Your Comments