ஒரு சிறு குழந்தை எப்படி தன் முதல் அரவணைப்பிற்காக ''அம்மா '' என்னும் வார்த்தையை தேர்ந்தெடுக்கிறதோ அது போல தன் ஆரோக்கியத்திற்காகவும்,
அது முதலில் தேர்ந்தெடுக்கிற பயிற்சி எதுவென்றால் அது இனி நாம் பார்க்கப் போகும் பயிற்சியைத் தான். ''பாலப் பருவம்'' என்றால் குழந்தைப் பருவத்தைக் குறிக்கும்.
பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?
குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்று கொள்ள வலியுறுத்துவதால் இதற்கு ''பாலாசனம்'' என்று பெயர்.
ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப் படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும்.
ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது?
சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி !
தன் மார்பினாலும் மேற்கையினாலும் உந்தி தள்ளி வலம் வரும். குழந்தையின் இந்த இயக்கத்தினால் தான் அதன் முதுகு, கழுத்து,
தோள் பட்டைகள், கைகள் என உடலின் மேல்பகுதி பலமடைந்து, உட்காருதல், தவழுதல், முட்டிப் போடுதல் என அடுத்த நிலைக்கு குழந்தை போகிறது.
இந்த நிலைக்கு செல்வதற்கு முன் படுத்தே தவழுவதால் மார்பு, கை, தோள் என அதன் உடலின் மேல் பகுதி அழுந்தி வலி எடுக்கும்.
குழந்தை குப்புறப் படுக்கும் போது, மார்பு, தோள், பின் பகுதிகளில் தவழ்வதால் ஏற்படும் இறுக்கம் தளர்கிறது. குழந்தையின் மன அழுத்தம், பதட்டம் குறைகிறது.
முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன?
இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீராகிறது. உடல், மனதை அமைதிப்படுத்துகிறது. இவ்வளவும் நடப்பதால் தான் குழந்தை தவழ்ந்து, நடக்கும் நிலைக்கு செல்கிறது.
குழந்தைகளுக்கு இந்த பலன்கள் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் தொடர்ந்து குப்புறப்படுப்பதை அனுமதிக்காதீர்கள்.
வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க !
தொடர்ந்து ஆசனங்கள் செய்யும் போது தோள் வலி, கை வலி ஏதேனும் ஏற்பட்டால் இந்த நிலையில் இருப்பது அவற்றை போக்கி விடும்.
மனம் அமைதியாகி, மந்தத்தன்மை விலகி, உடல், மனம் இரண்டும் ஒரு குழந்தையின் துள்ளல் நிலைக்கு வந்து விடும்.
பாலாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து உங்கள் நெற்றியை கால் முட்டிகளுக்கு முன்னால் தரையில் வைக்கவும்.
உங்கள் பிட்டத்தை உயர்த்தக் கூடாது. கைகளை தரையில் நீட்டியவாறு வைக்கவும்.
சீரான மூச்சில் 20 முதல் 30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
முட்டி மற்றும் கணுக்காலில் தீவிர வலி உள்ளவர்கள் பாலாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ருசியான இன்ஸ்டண்ட் பால் கோவா செய்வது எப்படி?
நெற்றியை தரையில் வைக்க முடியாதவர்கள், முன்னால் ஒரு தலையணை அல்லது அது போன்ற எதாவது ஒரு உயரமான பொருளை வைத்து அதன் மேல் நெற்றியை வைக்கவும்.
பாலாசனத்தின் நன்மைகள்
இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சோர்வை போக்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !
கால் முட்டியின் தசை நார்களைப் பலப்படுத்துகிறது. தூக்க இன்மையைப் போக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.
Thanks for Your Comments