திருமங்கலத்தில் இறைச்சிக் கடை ஒன்றில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுவது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிலையில் அசைவப் பிரியர்கள் இறைச்சி வாங்க முடியாமல் பெட்ரோலும் வாங்க முடியாத ஒரு சூழல் உருவாகி வருகிறது.
பொதுவாக, ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.
ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை ஆடி மாதத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கையானது.
திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில் இறைச்சிக் கடையை நடத்தி வரும் சந்திரன்.
இங்கு ஆடு, நாட்டு கோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக் கோழி, கின்னிக் கோழி என பல ரகங்களில் இறைச்சிகள் கிடைக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில்
இந்நிலையில் அதற்கு ஒரு படி மேலாக தற்போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மூலம் அனைவரையும் திக்குமுக்காட செய்துள்ளார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இறைச்சி வாங்க வெகு தூரத்திலிருந்து இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கறியுடன் பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து சந்திரன் கூறுகையில், "எனது தந்தை காலத்தில் திருமங்கலத்தில் எங்கள் குடும்பம் மட்டும் தான் வான்கோழி வளர்த்து விற்பனை செய்து வந்தார்கள்.
ஆடி மாதம் அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறேன்.
ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் என்றார். அதிரடி சலுகையில் சந்திரனின் கடைக்கு பொது மக்கள் படையெடுக்கின்றனர்.
Thanks for Your Comments