பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த கார்... ஆட்டோமேடிக் கியர் விபரீதம் !

0

பொள்ளாச்சியில் காரின் ஆட்டோமேட்டிக் கியரை, சாதாரண காரில் பயன்படுத்தும் கியரை போல தவறுதலாக இயக்கிய காரணத்தால், 

பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த கார்... ஆட்டோமேடிக் கியர் விபரீதம் !
புதிதாக வாங்கிய எக்ஸ்.எல் சிக்ஸ் கார் 65 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து நொறுங்கி விபரீதம் நிகழ்ந்துள்ளது. 

ஆசையாய் மகள் வாங்கிக் கொடுத்த காருக்குள் சிக்கி தந்தை பலியான சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி. 

பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !

பொள்ளாச்சி அருகே உள்ள A.நாகூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 63), விவசாயி. இவர் குடும்பத்துடன் தனது தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். 

இவரது மகள் லலிதா, மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல்கிருஷ்ணன் (8) என்கிற மகன் உள்ளார். பிரதீப்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஈஸ்வரனின் மகள் தனது தந்தை எளிதாக கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக 

ஆட்டோமேட்டிக் கியருடன் கூடிய புத்தம் புதிய எக்ஸ்.எல்.6 கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். 

பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த கார்

இதையடுத்து அவர் புதிய காரை எடுத்துக் கொண்டு ஏ.நாகூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். புதிதாக வாங்கிய அந்த காரை தனது வீட்டின் முன்பக்கம் நிறுத்தி இருந்தார். 

இந்த நிலையில் காருக்குள் அமர்ந்து அவரது பேரன் கோகுல் கிருஷ்ணா விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் ஈஸ்வரன் புதிய கார் என்பதால் அதை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார். இதனால் அவர் தனது பேரனை ஏற்றிக் கொண்டு காரை இயக்கினார். 

வழக்கமாக மேனுவல் கியர் உள்ள வாகனங்களை ஓட்டி பழகிய ஈஸ்வரனுக்கு, ஆட்டோமெட்டிக் காரின் கியர் சிஸ்டத்தை அறிந்து கொள்ள இயலவில்லை. 

அந்த கார் ஆட்டோ மெட்டிக் கியர் வசதி கொண்டது என்பதால் திடீரென்று பின்னால் செல்வதற்கு கியர் விழுந்தது. 

கார் ஆட்டோ மெட்டிக் கியர் வசதி கொண்டது

இதை அறியாமல் திடீரென்று ஈஸ்வரன் காரை இயக்கியதால், பின்னோக்கி அந்த கார் வேகமாக சென்றது. 

வழக்கம் போல கியரை மேல் பக்கம் நகர்த்தியுள்ளார், ஆட்டோமெடிக் கியர் சிஸ்டத்தில் நியூட்டரலில் இருந்து மேல்பக்கம் கியரை நகர்த்தினால் கார் ரிவர்ஸ் ஆகும், 

600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !

இந்த விபரீதத்தை உணராமல் கவனக் குறைவால் காரை இயக்கியதால், கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பின்னோக்கி நகர்ந்து 

அங்கு இருந்த கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 65 அடி ஆழ தண்ணீர் இல்லா தரைமட்ட கிணற்றில் உள்ளே பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

கார் கிணற்றுக்குள் பாய்ந்த சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அப்போது காருக்குள் இருந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். 

உடனே இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

65 அடி ஆழ தண்ணீர் இல்லா தரைமட்ட கிணற்றில் உள்ளே பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

அதன் பேரில் நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி காருக்குள் இருந்து ஈஸ்வரன், நகுல் கிருஷ்ணன் ஆகியோரை மீட்டனர். 

நம்மை தேடி வரும் உணவும் சந்தேகமும் !

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த ஈஸ்வரனுக்கு தீயணைப்பு துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

ஆனால் அதில் எந்த பயனும் அளிக்காததால் பரிதாபமாக இறந்தார். பேரன் நகுல் கிருஷ்ணன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். 

இதையடுத்து அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

தீயணைப்பு துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இறந்த ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  

மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி !

விபத்து குறித்து போலீசார் கூறுகையில் வழக்கமான கார்களில் முதல் கியரை இடப்பக்கம் நகர்த்தி மேல் நோக்கி தள்ளினால் கார் முன்பக்கம் செல்லும், 

ரிவர்ஸ் கியரை வலப்பக்கம் நகர்த்தி கீழ் நோக்கி இழுத்தால் கார் பின் பக்கம் செல்லும்.

ஆனால் ஆட்டோ மெட்டிக் காரில் பார்க்கிங்கிற்கு p என்றும், ரிவர்ஸ் எடுப்பதற்கு R என்றும் நியூட்ரல் வசதிக்கு N என்றும், வேகமாக செல்லும் டிரைவிங் மோடு D என்றும், 

மெதுவாக செல்லும் இடத்தில் 2 என்றும், மலைபகுதியில் வாகனத்தை இயக்குவதற்கு L என்றும் கியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

Manual vs Automatic Transmission Car

இதில் பார்க்கிங்கில் இருந்த காரை நியூட்ரலுக்கு கொண்டு வந்த ஈஸ்வரன், இது ஆட்டோமெடிக் கார் என்பதை மறந்து சாதாரண காரின் முதல் கியரை போடுவது போல, 

மேல் பக்கம் நகர்த்தி யதால் ரிவர்ஸ் கியர் இயக்கப்பட்டு, அந்த கார் பின் பக்கம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல் !

சிறிய கவனக்குறைவு ஒரு உயிர் பலியாக காரணமாகி விட்டதாக போலீசார் சுட்டி காட்டினர். 

ஆசை ஆசையாய் மகள் தன் தந்தைக்கு வாங்கிக் கொடுத்த காரே அவரது உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது சோகத்திலும் சோகம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings