கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.
அதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது.
இதனால், மூன்றாவது அலை குறித்து அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,
'மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்'' என பேசியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:
கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ மக்களே காரணமாகி விடக்கூடாது. மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வில்லை.
கொரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோயாக இருப்பதால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படும் நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது.
கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது.
மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக உள்ள சூழல் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும்
தமிழக்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க விடாதீர்கள் என கடுமையாகவே சொல்கிறேன்.
கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது
என்பதற்ககாகவே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை; கிடைக்க கிடைக்க பயன்படுத்தி வருகிறோம்.
மூன்றாவது அலை மட்டும் அல்ல, எந்த அலை வந்தாலும் அதனை வெல்லும் ஆளுமை தமிழக அரசுக்கு உள்ளது.
அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. அதற்காக கொரோனாவை விலை கொடுத்து வாங்கி விடக் கூடாது என பொது மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்.
கொரோனா மூன்றாவது அலையை தடுப்போம் என்றும் அவரச தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#COVID19 அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; #ThirdWave தடுப்போம் #MASKUpTN pic.twitter.com/4iNtdirZ8o
Thanks for Your Comments