அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

0

நம்மில் பல பேர் அடிக்கடி இந்தப் பிரச்னையை எதிர் கொண்டிருப்போம். சிலருக்கு இது தீவிரமான பாதிப்பாகவும் இருக்கலாம். 

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது?

அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) எனப்படும் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் ஆனந்த்.

`இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) 

காரணமாக நமக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். 

இரைப்பையிலுள்ள சாறும், உணவுகளும் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. 

இரைப்பைச் சாற்றில் உள்ள அமிலத்தால் உணவுக் குழாயிலுள்ள சவ்வு பாதிக்கப்படுவதால் 

உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு Gastroesophageal reflux disease (GERD) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) தீவிரமடைகிறது. 

இது ஒரு நீண்டகால நோய். இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும்.

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

சிகிச்சை வழங்கப்படாத இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் வேறு நோய்களையும் உடலுக்கு ஒவ்வாத சந்தர்ப்பங்களையும் உண்டாக்கும். 

இந்நோயால், மூச்சுக் குழலிய இறுக்கம், நெடுங்கால இருமல், குரல் கரகரப்பு, பல் கோளாறுகள், உணவுக் குழாய்ப் புற்றுநோய், 

உணவுக்குழாயில் சுருக்கம் போன்ற நோய்கள் ஏற்படும். அதனால் மிக கவனமாக இருப்பது அவசியம்.

அறிகுறிகள்

அமிலப் பின்னோட்ட நோய் அறிகுறிகள் என்ன?

அதிகளவிலான நெஞ்செரிச்சல் இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக உள்ளது. மேலும் உணவு விழுங்கும் போது வலி, அதிக உமிழ்நீர் சுரத்தல், 

குமட்டல், நெஞ்சுவலி, நீண்டகால இருமல், தொண்டை அழற்சி, மூச்சுத்தடை போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. 

இந்நோயின் அறிகுறிகள் தீவிரமடைந்த நிலையில் சிலருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இரைப்பையில் உள்ள அமிலமானது, உணவுக் குழாய்க்குள் செல்வதால் நெஞ்செரிச்சல் பிரச்னை உண்டாகிறது. 

பொதுவாக முதல் முதலாக நெஞ்சில் ஏற்படும் எரிச்சலை வைத்தே மக்கள் இந்நோயை உணர்கிறார்கள்.

என்ன காரணங்கள்?

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்பட காரணங்கள்?

சில மருந்து வகைகள் இரைப்பை - உணவுக்குழாய் இறுக்கத்தைத் தளர்வடையச் செய்யும். இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம்.

புகைபிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும்.

உடல் பருமன், தோல் தடிப்பு நோய், உள்ளுறுப்பு இறக்கம் போன்றவை முக்கியமாக இந்த நோய்க்குக் காரணங்களாக இருக்கலாம்.

தீர்வுகள் என்ன?

அமிலப் பின்னோட்ட நோய் தீர்வுகள் என்ன?

இந்த நோய்க்கு பல மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் இருக்கின்றன. மேல் இரையகத்தின் பகுதிகள் உணவுக் குழாயின் கீழ் இறுக்கிப் பகுதியின் மேலே மடிக்கப்பட்டுத் தைக்கப்படும், 

இதன் மூலம் கீழ் உணவுக்குழாய் இறுக்கமடைந்து உணவு மற்றும் அமிலம் மேல் நோக்கித் தள்ளப்படுவதைத் தடுக்கிறது.

தீவிரமாகாமல் தடுக்க :

இந்த நோய் தீவிரமாகும் போது உணவுக்குழல் சுருங்கி, சாப்பிடுவதே சிரமமாகி விடுகிறது. 

மேலும் இந்நோய் உணவுக்குழலில் புற்றுநோய் உண்டாவதற்கும் காரணமாக இருக்கிறது. 

அமிலப் பின்னோட்ட நோய் தீவிரமாகாமல் தடுக்க
ECG பரிசோதனை, PH அளவுகளை கண்டறியும் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்நோயின் நிலையைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம்  இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

உறங்கச் செல்லும்முன் அதிகளவில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உணவருந்திய பிறகு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்ல வேண்டும்.   

சாக்லெட், கொழுப்பு மற்றும் காரம் அதிகமுள்ள உணவு வகைகள், காஃபி போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

உணவில் 50 சதவிகிதம் பச்சைக் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவது நல்லது. அவரவர் தேவைக்கேற்ப தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

வயிற்றை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகளை செய்வது செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

அறுவை சிகிச்சை மட்டும் தீர்வல்ல. ஆனால், நாம் சரியான வழிகளைப் பின்பற்றினால் இந்நோயை எளிதில் தடுக்கலாம்.

இடது பக்கம் தூங்குவது அல்லது தலையும் உடம்பின் மேற்பாகமும் உயரே இருக்குமாறு தலையணைகளைப் பயன்படுத்தித் துயில் கொள்ளுதல் நல்லது.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

சிறிய அளவுகளில் உணவு அருந்துதல், குறிப்பாக படுக்கைக்கு முன்னர் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்தல் நலம். 

எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும். வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். 

அதிக அமிலத் தன்மையான உணவுகளையும், அதிக காபி, புகை, மதுபானம் போன்றவற்றையும் தவிர்த்தால் கட்டாயம் இந்த நோயின் பாதிப்பு குறையும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings