பெற்றோர்கள் தான் குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதிலும், சுத்தமாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே சிறுவர்களுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்கும் போது அவற்றை வாயால் ஊதுவதால் தாய்மார்களுக்கு பூச்சிப்பல் இருந்தால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை பல்தூரிகைகையை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பற்தூரிகையை தெரிவு செய்வது அவசியம்.
பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பல்தூரிகை
இதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல்தூரிகைகளை மாற்ற வேண்டும். பற்தூரிகைகள் பல விதமான ரகங்களில் காணப்படுகின்றன.
ஒவ்வொருவரின் பற்களின் தன்மைக்கு ஏற்றவாறு பல்தூரிகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சொப்ட், மீடியம், ஆட் என பல்தூரிகைகள் காணப்படுகின்றன.
வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு பல்தூரிகைகளை தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது அதிகம் தேய்ந்த பற்களுக்கு மென்மையான பற்தூரிகைகளை பயன்படுத்த வேண்டும். பொதுவான வர்களுக்கு மீடியம் பல்தூரிகையே சாலச் சிறந்தது.
வாய்த் துர்நாற்றம்
ஒழுங்கான முறையில் பல்தூரிகையை பயன்படுத்தாமை. உதாரணமாக நாம் அனைவரும் முன்பற்களுக்கு மாத்திரம் பற்தூரிகையை பயன்படுத்துகிறோம்.
ஆனால், அவ்வாறு செய்வது உகந்ததல்ல. உட்புற, வெளிப்புற பற்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவற்றை நன்றாக பல்தூரிகைகளைக் கொண்டு துலக்க வேண்டும்.
பற்களில் உணவு தேங்கியிருப்பதாலும், பல்லுக்கும் ஈறுக்குமிடையே சிறு இடைவெளி ஆரம்பித்து அதன் பிறகு பெரியவில் ஈறுகளை பாதிக்கச் செய்கின்றது.
நாக்கில் பற்கள் படுவதாலும் வாய்த் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமைகின்றது.
நிறமாற்றம்
இந்த நிறமாற்றமானது உடனடியாக ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு பல் செத்துப் போய் விடும்.
உணவு உண்பதாலும் நிறம் மாற வாய்ப்புள்ளது. கோப்பி, தேநீர் சொக்லேட் ஆகியவை சாதாரணமாக நிறமாற்ற த்துக்கு ஏதுவாக அமைகின்றன.
மருந்துகளை எடுப்பதாலும் பற்கள் நிறமாற வாய்ப்புள்ளது. மற்றது முதுமை ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங்களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது.
சிறு வயது முதல் கல்சியம், அயடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன.
இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும். விற்றமின் சத்து அதிகம் உள்ள தோடம்பழம், எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும்.
மீன், கீரை வகைகள், தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவேண்டும்.
சூடாகவும், காரமாக, அதிக குளிராகவும் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக துலக்கவும்.
விபத்து போன்ற காரணங்களினால் பற்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வளவு விரைவில் வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற முடியுமோ அந்தளவுக்கு பற்களை காக்கமுடியும்.
உதாரணமாக ஒரு விபத்தில் பல் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டால் அந்தப் பல் இறப்பதற்கு முன் பொருத்த வேண்டும்.
ஒரு சில மணித்தியாலங்களின் பின் அந்தப் பல்லைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.
வாய்புற்று நோய்
சிறந்த முறையில் பல் துலக்குவதை கடைபிடிக்க வேண்டும். பற்களில் ஏதாவது துளைகள் ஏற்பட்டால் அவற்றிற்கு சிகிச்சை பெற்றும்,
மேலும் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரிடம் சென்றும் சிகிச்சை பெறவேண்டும்.
இவ்வாறு செய்தால் பற்களை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியும். சிறு துண்டு பல் மிக நீண்ட காலமாக முரசில் தங்கியிருப்பதால் பல் வீக்கம், தலைவலி போன்றன ஏற்பட வாய்ப்புள்ளது.
தெற்றுப் பல்
தெற்றுப் பல் பரம்பரை என்று சொல்லலாம். எலும்பின் அமைப் பும் ஒரு காரணமாக அமைகின்றது.
இதற்கு வைத்திய சிகிச்சை பெறுவதன் மூலம் சரிசெய்து விடலாம். விபத்தின் காரணமாகவும் தெற்றுப் பல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பூச்சிப் பல் வராமல் தடுக்க
அவற்றை உண்பதால் எமது பற்களின் இடுக்குகளில் ஒரு மணிநேரம் உணவுகள் தங்கியிருப்ப தால் தான் பூச்சிப் பல் வர காரணமாக அமைகிறது.
மேலும் பற்களை காலையில் மாத்திரம் துலக்கி விட்டு இரவு நேரத்தில் துலக்காததாலும் பூச்சிப்பல் வரலாம்.
எனவே நாம் உணவு உண்ட உடனே பற்களை துலக்க வேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தொழிலுக்கு செல்வதால் இதனைக் கடைபிடிக்க முடியாது.
இருப்பினும் ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரு முறை பல் துலக்க வேண்டும். காலையிலும்இ இரவு படுக்கைக்குப் போக முன்பும் பல் துலக்க வேண்டும்.
Thanks for Your Comments