கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?

6 minute read
0

திருவாரூர் மாவட்டம் மறையூர் தான் இவர்களது பூர்வீக கிராமம். இவர்களது தந்தை ராமதாஸ் மின்வாரியத்தில் உதவி பொறியாளராகப் பணி புரிந்தார். 

எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.ஸ்வாமிநாதன்

இதன் காரணமாக கும்பகோணம் மாதுளம் பேட்டையில் குடியேறினார். சில ஆண்டுகள் கழித்து பணியிட மாறுதலில் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். 

அதன் பின்னர் அவர் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று விட்டதாகவும், சகோரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் வந்த இவர்கள், விஐபி ஏரியாவான ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக வீடுகட்டி செட்டிலானார்கள். 

கொற்கை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பசுமாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்தனர். தொடர்ந்து ‘விக்டரி ஃபைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் தொடங்கினர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அருகில் உள்ள கிராமத்தில் சுமார் 100 பசு மாடுகளை வாங்கி கிரீஷ் பால் பண்ணை என்ற பெயரில் பால் பண்ணை ஒன்றைத் துவங்கி நடத்தி வந்தார்கள்.

தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

இதற்குச் சில   நாட்களுக்குப் பிறகு, "விக்டரி பைனான்ஸ்" என்ற பெயரில் வங்கியல்லாத நிதி நிறுவனம் ஒன்றைத் துவங்கினர். 

விக்டரி ஃபைனான்ஸ் நிதி நிறுவனம்

சில ஆண்டுகளுக்கு முன் எம்ஆர் கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட போது ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி?

சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கத் தொழில் செய்து வருவதாக சொல்லி வந்தனர். அதோடு, கொற்கை பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். 

ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செல்லவும் ஹெலிகாப்டர் வாடகைக்குக் கிடைக்கும்' என நாளிதழ்களில் பெரும் செலவு செய்து விளம்பரம் செய்து, அர்ஜுன் ஏவியேஷன்' என்ற நிறுவனத்தையும் தொடங்கினர். 

20க்கு மேற்பட்ட கார்கள் வைத்துள்ள அவர்கள் தங்களைப் பாதுகாக்க செக்யூரிட்டிகளையும் நியமித்துக் கொண்டனர்.

இப்படி அனைவரிடமும் தங்களைப் பற்றி பிரமாண்டமான இமேஜை உருவாக்கினர். இந்த அடிப்படையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டனர்.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 6, April 2025
Privacy and cookie settings