அய்யா எடப்பாடி போட்டோ இருக்கட்டும்.. முதல்வர் !

1 minute read
0

புத்தக பையில் முந்தைய முதலமைச்சர்கள் புகைப்படம் இருந்து விட்டு போகட்டும், அதை மாற்ற ரூ.13 கோடி செலவு செய்ய வேண்டாம் என்று 

அய்யா எடப்பாடி போட்டோ இருக்கட்டும்.. முதல்வர் !

முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சட்ட சபையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாடு காணாமல் போச்சு: சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.

பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.32,599.54 கோடி. இவை மக்களின் வரிப்பணம். 

எனவே, அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். கற்றல் திறனை அதிகரித்து இடைநிற்றலை குறைப்பது முக்கிய பணியாக மேற்கொள்ள உள்ளோம்.

கிராமத்து கொத்துக்கறி குழம்பு செய்வது எப்படி?

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை, பள்ளி முடிந்த பிறகு 6,7,8 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும், 

9,10,11,12 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். 

அய்யா எடப்பாடி போட்டோ இருக்கட்டும்.. முதல்வர் !

தமிழ் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு ரொம்பவே சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உள்ளது.

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !

கடந்த 10 ஆண்டில் (அதிமுக ஆட்சி காலத்தில்) கல்வித் துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த துறையை, மியூசிக்கல் சேர் போல விளையாடி யிருக்கிறார்கள். 

கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 லட்சம் விலையில்லா புத்தகப் பைகள் கொள்முதல் செய்யப்பட்டன. 

அதில், முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 

விபத்தில் சிக்கிய யாஷிகா வெளியிட்ட சிகிச்சை வீடியோ... கண்ணீர் சிந்தும் ரசிகர்கள் ! 

இது குறித்து குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, இந்த புத்தக பைகளை வாங்க 13 கோடி ரூபாய் செலவாகி யுள்ளது. 

இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். 

அய்யா எடப்பாடி போட்டோ இருக்கட்டும்.. முதல்வர் !

அந்த புத்தகப் பையில் அவர்களின் படமே இருந்து விட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசி விட்டுக் கொடுத்தார். இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

பொதுவாக ஆட்சி மாறும் போது முந்தைய முதல்வர்களின் அடையாளங்களை அழித்து விட்டு தங்கள் அடையாளங்களை புகுத்துவது வழக்கம். 

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?

ஆனால் ஸ்டாலின் அதைச் செய்ய விரும்பவில்லை என்பது அமைச்சர் பேச்சின் மூலம் உறுதியாகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings