நடுரோட்டில் பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்தி கொல்லும் இளைஞன் !

0

ஒரு தலைக்காதலால் நடுரோட்டில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடுரோட்டில் பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்தி கொல்லும் இளைஞன் !
ஆந்திர மாநிலம் குண்டூர் பரமைய்ய குண்டா பகுதியை சேர்ந்த ரம்யா என்ற 21 வயது நிரம்பிய இளம்பெண்  தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில்  பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

ரம்யாவுக்கு குண்டூர் அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா இன்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உள்ளார்.

இந்த நிலையில் இருவரும் தினமும் செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

காலபோக்கில் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் ரம்யா அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். 

சசி கிருஷ்ணாவுக்கு தாய், தந்தை இல்லாததால் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சசி கிருஷ்ணா திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது ரம்யாவுக்கு தெரியவந்தது. 

சுவையான பீட்ரூட் ரைஸ் செய்வது எப்படி?

ஒரு கட்டத்தில் திருட்டில் ஈடுபடாதே என்று கூறி ரம்யா, சசி கிருஷ்ணாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ரம்யா அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றார். 

அப்போது அங்கு பைக்கில் வந்த சசி கிருஷ்ணா, ரம்யாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் பைக்கில் வெளியே சென்று வரலாம் என சசிகுமார் அழைத்தார். 

அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பெண் தேடுவதாக சொல்லி 50 பெண்களை சீரழித்த உளவுத்துறை அதிகாரி மகன் ! 

பலமுறை அழைத்தும் ரம்யா பைக்கில் ஏற மறுத்ததால் அந்த வாலிபர் கடும் ஆத்திரமடைந்தார். 

அப்போது, அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை நடுரோட்டில் வைத்து சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு !

இதனையடுத்து அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடுரோட்டில் பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்தி கொல்லும் இளைஞன் !

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

பின்னர், ரம்யாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். 

நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !

மேலும், ரம்யா குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings