அடிக்கடி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தும் மீரா மிதுன் கைதின் போதும் கதறி கதறி ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இயக்குனர் சேரன் தன்னுடன் தவறாக நடந்ததாக அவர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சோசியல் மீடியாவில் பப்ளிசிட்டி தேடுவதற்காக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும்
மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !
இந்த விவகாரத்தில் ரசிகர்களைக் கடந்து சோசியல் மீடியாவில் திரையுலகினர் பலரும் கூட கடுமையான விமர்சனங்களை மீரா மிதுன் மீது முன் வைத்தனர்.
இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் புகைப்படங்களை பதிவிடுவது, யூ-டியூப்பில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை பற்றி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவது என
அரசியல் பிரபலங்களும் சினிமா திரையுலகினர் பலரும் மீரா மிதுன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில்
மீரா மிதுன் மீது அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீராமிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் திரையுலகில் தனது வெற்றிக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் என்று
ஒரு சாதியை குறிப்பிட்டு பேசிய மீரா மிதுன், இதில் அந்த சாதி இயக்குனர்கள் தான் இப்படி செய்கிறார்கள் அந்த சாதி பசங்க தான் இப்படி எல்லாம் செய்வாங்க.
அந்த சாதி இயக்குனர்களை திரையுலகை விட்டு விரட்ட வேண்டும் என்றும்
மேலும் அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மரபணு என்றால் என்ன?
இது பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதே போல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சார்பிலும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பின்னரும் ஒரு வீடியோவை வெளியிட்ட மீராமிதுன், தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விடுத்தார்.
இந்த நிலையில் கேரளாவில் ஆண் நண்பருடன் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது அப்போதும் தனது செல்போனை எடுத்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கதறிக் கொண்டு பேசியிருக்கிறார்.
கைது செய்ய போலீஸ் முற்பட்ட போது, அவர் தங்கியிருந்த அறைக்குள் சென்ற போலீஸ் அவரை கைது செய்ய நெருங்கிய போது,
எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவி என்ன?
கட்டிலை சுற்றி சுற்றி வந்து, அந்த வீடியோவை ஆவேசமாகவும் கதறிக் கொண்டே பேசியும் வெளியிட்டிருக்கிறார்.
அப்போது போலீசார் செல்போனை கேட்ட போது செல்போனை கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே அந்த வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்.
முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் டார்ச்சர் கொடுக்கணுமா? போலீஸ்னா அட்ராசிட்டி பண்ணுவீங்கள? என் போனை தர முடியாது.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன்? எதற்கு?
நான் குத்திக்கிட்டு செத்துருவேன். என் மேல ஒரு கை பட்டுச்சுன்னா என்னை கொலை பண்ணிக்கிட்டு செத்துருவேன்.
முதலமைச்சர் அவர்களே பிரதமர் அவர்களே இந்த தமிழ்நாடு போலீசார் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க’’ என்று கதறுகிறார்.
Thanks for Your Comments