செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !

0

செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டம் எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பதற்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வு நடந்திருக்கிறது. 

செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !

பூமியெங்கும் மக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாயுவை, சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 

செவ்வாய்க் கோளில் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு. வேறொரு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ரம்ஜானுக்கு ஸ்பெஷலான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி?

நாசா அமைப்பு தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பல சாதனைகளை செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கி மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது நாசா அமைப்பு.

செவ்வாயின் வளி மண்டலம் 96% கார்பன் டை ஆக்சைடால் நிறைந்தது. ஆக்சிஜன் இருப்பதோ வெறும் 0.13 சதவிகிதம் தான். பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

FASTag எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்?

எனவே இது போன்ற கிரகத்திற்கு மனிதர்கள் சென்றால் ஆக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க முடியுமா என்று கேள்வி எழும்? 

செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா சாதனை

தற்சமயம் இதற்கு ஒரு பதிலை நாசா அமைப்பு கொடுத்துள்ளது, மனிதர்களை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியுமா?

என்ற கேள்விக்கு விடை காண நாசா அனுப்பிய Perseverance ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கியது. 

ஆக்சிஜன், தொழிற்சாலைகளில் எப்படி தயாரிக்கப்படுகிறது? - ஆக்சிஜன் தட்டுப்பாடு !

செவ்வாய் கோளுக்கு தனது பயணத்தைப் பூமியிலிருந்து தொடங்கிய 6 சக்கர பெர்செவரன்ஸ் ரோவர் பல்வேறு குட்டி குட்டி சாதனங்களையும் தன்னுடன் எடுத்து சென்றது. 

செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் ஆனது துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தவல்களை நாசா அமைப்பிற்கு அனுப்பி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒவ்வொன்றாக அவற்றை சோதனை செய்து பார்த்து வருகிறது நாசா. 

அதன் பின் இன்ஜெனியூட்டி என்ற குட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க செய்து புதிய சாதனை செய்தது நாசா. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மகத்தான சாதனையாகும். 

1.8 கிலோ ஹெலிகாப்டர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

1.8 கிலோ ஹெலிகாப்டர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. பூமியில் இருப்பதில் வெறும் ஒரு சதவிகிதம் தான். அதனால் ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தேவையான காற்று கிடைக்காது.

முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி...  குளோபல் ஹெல்த் !

ஈர்ப்பு விசையில் இருந்து மேலே எழும்பத் தேவையான இழுப்புவிசை செவ்வாயில் குறைவு. அது சாதகமான அம்சம். இருப்பினும் மிகக் குறைந்த எடையிலேயே இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டது. 

அதன் எடை வெறும் 1.8 கிலோ தான். ஹெலிகாப்டரின் பிளேடுகள் 1.2 மீட்டர் நீளம் கொண்டவை. நிமிடத்துக்கு 2,500 முறை சுழலும். இது மிகவும் அதிகமான வேகம். 

செவ்வாயில் ஒலி பரவும் வேகத்தில் மூன்றில் இருபங்கு வேகத்தில் பிளேடுகளின் நுனிப்பகுதி இயங்கும். ஹெலிகாப்டர் தன்னிச்சையாக இயங்க வேண்டும். 

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பால்சுறா குழம்பு செய்வது எப்படி?

அதை ஒரு பொம்மையைப் போல பூமியில் இருந்து இயக்க முடியாது. ஏனெனில் பூமியில் இருந்து அனுப்பப்படும் கட்டளை 30 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து செவ்வாயை அடைவதற்கே 16 நிமிடங்கள் ஆகி விடும். 

இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் அடுத்த 10 நாள்களில் இன்னும் 3 முறை பறக்க இருக்கிறது. 

கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து ஆக்சிஜன்

கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து ஆக்சிஜன்

இந்த சாதனை இதோடு நிற்கவில்லை பெர்செவரன்ஸ் ரோவரோடு அனுப்பப்பட்டிருந்த மாக்ஸி (MOXIE) எனும் சாதனத்தை சோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது நாசா. 

அதாவது செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. 

சுவைக்க, அசத்தலான மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி?

செவ்வாயின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவானது மிக மிகக் குறைவு. செவ்வாய் வளிமண்டலம் 95% கார்பன் டை ஆக்ஸைடால் நிறைத்திருக்கிறது. மீதமுள்ள 5 சதவிகிதத்தில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்கள் நிறைந்திருக்கிறது.

மாக்சியின் அமைப்பு

மாக்சியின் அமைப்பு

கார் பேட்டரி அளவுள்ள இந்த பெட்டி ரோவரின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இதன் எடை பூமியில் 37.7 பவுண்டுகள், செவ்வாய் கிரகத்தில் 14.14 பவுண்டுகள். 

இது ரோவரின் உள்ளே வலது முன் பக்கம் அமைந்துள்ளது. MOXIE ஒரு மரத்தைப் போல ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. 

மாவு சத்து மிக்க ஆலூ பரோத்தா செய்வது எப்படி?

இது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஆக்சிஜனை உருவாக்கும் திறன் கொண்டது. முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை இது உற்பத்தி செய்துள்ளது. 

இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்களுக்கு சுவாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் MOXIE வடிவமைக்கப்பட்டுள்ளது. 

MOXIE கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமார் 1,470 டிகிரி பாரன்ஹீட்டிற்கு வெப்பப்படுத்த வேண்டியிருந்தது. இதன் மூலம் சுமார் ஐந்து கிராம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடிந்தது. 

எப்படி ஆக்சிஜன் உருவாக்கப்பட்டது?

எப்படி ஆக்சிஜன் உருவாக்கப்பட்டது

இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும் என்பதோடு ரோவர் பூமிக்கு திரும்பும் போது உந்து சக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். 

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் சத்தமில்லாமல் முக்கிய மைல் கல்லை எட்டியிருக்கிறது நாசா. 

பெண்கள் ஏன் பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?

ஆக்சிஜனைப் பிரித்தெடுப்பதை விட கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனைத் தயாரிப்பதே எளிது என விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். 

கார்பன் டை ஆக்சைடு வாயுவானது இரண்டு ஆக்சிஜன் அணுக்களையும், ஒரு கார்பன் அணுவையும் கொண்டது. இதில் இருந்து ஒரு ஆக்சிஜன் அணுவைப் பிரித்தெடுத்திருக்கிறது மாக்சி. 

மீதமிருந்த ஒரு கார்பன் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு செவ்வாயின் வளி மண்டலத்திலேயே விடப்பட்டது.

வரும் காலங்களில் செவ்வாய் பயணத்தின் போது மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் காற்று இருக்க வேண்டியது அவசியம். மேலும் ராக்கெட் எரிபொருள்களுக்கும் ஆக்ஸிஜன் அவசியம். 

பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?

செவ்வாய் கிரகத்தில் மிக அதிக அளவில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க முடியும் என்ற நிலையில், எதிர்காலத்திற்கு இது உதவும்.

செவ்வாயில் தயாரித்த ஆக்சிஜனால் என்ன பயன்?

செவ்வாயில் தயாரித்த ஆக்சிஜனால் என்ன பயன்?

செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம் தான். இதைக் கொண்டு மனிதனால் 10 நிமிடம் தான் சுவாசிக்க முடியும். 

நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

இதன் மூலம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம். விஞ்ஞானிகளின் பார்வை இதில் வேறு மாதிரியாக இருக்கிறது.

கார்பன் டை ஆக்சைடு செறிந்த செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை மாக்சி தயாரித்திருக்கிறது. 

இதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய கருவியை உருவாக்கி விட்டால், விண்வெளி வீரர்கள் ஆக்சிஜனை பூமியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் போது அவர்கள் சுவாசிக்கவும், பூமிக்குத் திரும்பவதற்கான ராக்கெட்டுகள் செயல்படுவதற்கும் பல டன் ஆக்சிஜன் தேவை. 

துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

அதைக் கொண்டு செல்வது கடினம், அதற்குப் பதிலாக மாக்சி போன்ற கருவியைக் கொண்டு சென்றால் போதும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 

ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க முயற்சி

ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க முயற்சி
மேலும் செவ்வாய் கிரகத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவை அனுப்ப, சுமார் 15,000 பவுண்டுகள் ராக்கெட் எரிபொருள் மற்றும் 55,0000 பவுண்டுகள் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

மூச்சு விட, MOXIE இன் முதன்மை புலனாய்வாளர் மைக்கேல் ஹெக்டின் கூற்றுப்படி, ஒரு ஆண்டு முழுவதும் நான்கு பேர் கொண்ட குழுவினருக்கு ஒரு மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படும். 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வழியெல்லாம் ஆக்ஸிஜனைக் குறைப்பது சிக்கலானது மற்றும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதனால் தான் செவ்வாயில் ஆக்ஸிஜனைப் பிரித்தெடுப்பதை விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings