நோ பார்க்கிங்ல பைக்.. அதுக்காக ஆளோடு சேர்த்து தூக்கணுமா? வலுக்கும் கண்டனம் !

0

நோ பார்க்கிங் ஏரியாவில் நிற்கும் பைக்குகளையும், கார்களையும் தூக்கி ஏற்றி சென்று விடுவார்கள் போலீசார். 

நோ பார்க்கிங்ல பைக்.. அதுக்காக ஆளோடு சேர்த்து தூக்கணுமா? வலுக்கும் கண்டனம் !
போலீஸ் ஏற்றி விட்டால் அப்புறம் அந்த பைக்கையோ, காரையோ திரும்ப பெறுவது அவ்வளவு சுலபமல்ல. பெரும்பாலும் காரை தூக்கி ஏற்றிச் செல்ல மாட்டார்கள். 

அந்த காரை எடுக்க முடியாதபடி நான்கு சக்கரங்களிலும் லாக் செய்து விட்டு சென்று விடுவார்கள். அபராதம் செலுத்திய பின்னர் தான் அந்த லாக் அகற்றப்படும். 

ஆனால், மும்பையில் கணவர் காரை நிறுத்து விட்டு கடைக்குள் செல்ல, காருக்குள் உட்கார்ந்து குழந்தைக்கு 

பால் ஊட்டிக் கொண்டிருந்த தாயை காருடன் சேர்த்து அலேக்காக தூக்கி வாகனத்தில் ஏற்றியதால் போலீசாருக்கு கண்டனங்கள் எழுந்தன.

தற்போது பைக்கை ஆளோடு சேர்த்து அலேக்காக தூக்கி யிருக்கிறார்கள். காவல்துறை சில நேரங்களில் ஓவர் ஸ்ட்ரிக்ட் ஆகி விடுகிறது. 

புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் சந்தோஷம் !
அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. கிரேன் வைத்து அலேக்காக ஆளோடு சேர்த்து ஒரு பைக் டோ செய்யப்படும் புகைப்படம் தான் இணையத்தின் இன்றைய ஹாட் டாப்பிக்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகர போக்குவரத்துக் காவலர்களின் வேலை தான் இது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. 

புனே நகரில் நானா பேத் பகுதியில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அப்பகுதியில் வாகன நெரிசலைக் கண்காணிக்கும் பணியில் இடம் பெற்றிருந்த அதிகாரி டோயிங் ட்ரக்குடன் ரோந்தில் இருந்தார். 

வானில் அதிசயம் நிகழ்த்தும் பறவை கூட்டம் !
பரபரப்பான அப்பகுதியில், நோ பார்க்கிங் குறியீடு வைக்கப்பட்டிருந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை அவர் டோ செய்து கொண்டிருந்தார். 

அந்த் கபீர் சவுக் பகுதி வாகன நெரிசலுக்குப் பெயர் போனது. 

அந்தப் பகுதியில் ரோ பார்க்கிங் குறியீடு உள்ள இடத்தில், ஒரு பைக்கில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்க அப்படியே டோ செய்தனர் காவல்துறையினர். 

சுற்றி நின்றவர்கள் எல்லாம் புகைப்படம் எடுக்க அது இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

வாகனத்தின் உரிமையாளரோ நான் அந்த இடத்தில் வண்டியை மட்டும் தனியாக நிறுத்தி விட்டுச் செல்லவில்லை, அங்கே சில நிமிடங்கள் எனது வண்டியுடன் நின்றிருந்தேன் எனக் கூறுகிறார். 

ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா?
ஆனால், அந்த நபரை போலீஸார் வாகனத்துடன் தூக்கும் காட்சி பதிவாகியுள்ளது. போலீஸார் விதிமீறல் என்கின்றனர்.

வாகன ஓட்டியோ நான் ஹெல்மெட் கூட போட்டிருந்தேன் எந்த விதிமீறலும் இல்லை எனக் கூறுகிறார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நோ பார்க்கிங்; நோ ஸ்டாப்பிங்க்.. என்ன வித்தியாசம்?

நோ பார்க்கிங்ல பைக்.. அதுக்காக ஆளோடு சேர்த்து தூக்கணுமா? வலுக்கும் கண்டனம் !

நோ பார்க்கிங்; நோ ஸ்டாப்பிங்க் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. 

ஒரு தெருவோ அல்லது சாலையோ அங்கே நோ பார்க்கிங் என போர்டு இருந்தால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டி அவருடைய வாகனத்தை விட்டுச் செல்ல முடியாது. 

கேரளாவில் திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்ற மணமகள் !

ஆனாக், வாகனத்துடன் அங்கே நிற்க நேர்ந்தால் நிற்பது தவறல்ல. ஆனால் சில இடங்களில் அப்படி அவரசத்துக்குக் கூட வாகனத்துடன் நின்றுவிட முடியாது. 

அந்த இடங்களில் நோ ஸ்டாப்பிங் “No Stopping”, என போர்டு வைக்கப்பட்டிருக்கும். இந்த வித்தியாசத்தை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்வது நன்று.

இது முதல் முறை அல்ல

இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. மும்பையில் ஒரு முறை காரில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்த பெண்ணுடன் காரை டோ செய்த சம்பவம் மறப்பதற்கு இல்லை. 
அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?

நோ பார்க்கிங்கில் நின்ற அந்தக் காரை காவலர்கள் டோ செய்தபோது உள்ளே தாயும் சேயும் இருந்தனர்.

அதேபோல், டோ ட்ரக் ஆப்பரேட்டர்கள் மீதும் வாகன ஓட்டிகள் எக்கச்சக்கப் புகார்களை முன் வைக்கின்றனர். 

காஸ்ட்லியான கார் என்று கூட பாராமல்  கார்களை கரடு முரடாக இயக்கி, பம்பரை நொறுக்கி விடுவதாகக் குமுறுகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings