போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இளம்பெண். கணவர், தாழ்வு மனப்பான்மை காரணமாகத் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி கண் மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?
கணவன் அடிப்பதால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப் படுத்துகிறார் என்றும்,
அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும்படியும் அழுதிருக்கிறார்.
அதையடுத்து வழக்கறிஞர் ஒருவருடன் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற அந்தக் கணவரை `தனியாக அழைத்துப் பேசிய அதிகாரிகள்,
அத்துடன் மேலும் தேவையென்றால் குடும்ப நல நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி விட்டனர்.
நியாயம் கிடைக்கும் என்று சென்ற இடத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் வீட்டுக்குத் திரும்பினார் அந்தப் பெண்.
எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவி என்ன?
அதன் பிறகு வழக்கமான அடி உதைகளுடன், சைக்கோத்தனமான செயல்களையும் அரங்கேற்றி இருக்கிறார் அந்தக் கணவர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் தன்னை மிருகத்தனமாக தாக்கியதால் வலியுடன் காவல்துறை அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு அழுதிருக்கிறார் அந்தப் பெண்.
அதையடுத்து லாஸ்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது.
உடனே லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியிருக்கின்றனர்.
ஆனால் அங்கும் அந்தப் பெண்ணிடம் எந்தப் புகாரையும் வாங்காமல், இருவரிடமும் பேசி அனுப்பி இருக்கின்றனர்.
வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் கணவர் அடித்ததால் மதியம் ஒரு மணிக்கு மீண்டும் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண், `நான் கொடுத்த புகாரை ஏன் நீங்கள் வாங்கவில்லை?
என்னால் அவர் அடிப்பதைத் தாங்க முடியவில்லை. என் புகாரை வாங்குங்கள். நான் விவாகரத்துப் பெற வேண்டும் என்று அழுதிருக்கிறார்.
பன்றி கொழுப்பு அனைத்து உணவுகளிளும் சேர்க்கப்பட்டுள்ளது எச்சரிக்கை !
அப்போது அங்கு பணியில் இருந்த முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட தலைமைக் காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை அமர வைத்து விட்டு,
அனைத்துக் காவலர்களையும் மதிய சாப்பாட்டுக்காகப் போகும்படி உத்தரவிட்டு இருக்கிறாராம்.
அனைவரும் சென்றுவிட்ட பிறகு அந்தப் பெண் குறித்த அனைத்துத் தகவல்களையும் கேட்ட அந்த காவலர், `உன்னைப் பார்த்தால் ரெண்டு புள்ளைக்கு அம்மா மாதிரி தெரியலையே...
நீ சிகப்பா இவ்ளோ அழகா இருக்கே. ஆனா உன் வீட்டுக்காரன் கருவாடு மாதிரி இருக்கான். அவன் கூட வாழ்ந்து நீ ஏன் கஷ்டப்படணும்? உனக்கு நான் வேலை வாங்கித் தர்றேன்.
இனிமே நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்” என்று கூறி திடீரென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்திருக்கிறார்.
அவர் வெடுக்கென்று கையை இழுத்துக் கொள்ள, `உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்.
வான்கோழியின் இறைச்சி மற்றும் முட்டை பற்றி அறியாத தகவல்கள் !
அதற்கு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று அந்தப் பெண் கூற, ‘அதுக்கென்ன நான் கற்றுக் கொடுக்கிறேன் என்று கூலாகக் கூறி விட்டு,
எந்த உதவியாக இருந்தாலும் தனக்குப் போன் செய்யும்படி தனது இரண்டு எண்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அதற்கு மறுநாள் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீட்டிலிருந்த கதவை உடைத்து 13 பவுன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறிய போது தான், காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறி அழுதிருக்கிறார்.
அந்தக் காவலரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அந்த அமைப்பினர், அந்த காவலருக்கு போன் செய்யும்படி கூறி அந்த உரையாடலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த உரையாடலின் போது விவகாரத்துக்காக வழக்கறிஞருக்கு கொடுக்கத் தன்னிடம் பணம் இல்லை யென்று கூறுகிறார் அந்தப் பெண்.
சுவையான பீட்ரூட் ரைஸ் செய்வது எப்படி?
அதற்கு, `அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். அப்புறமா வாங்கிக்கச் சொல்றேன். அவரை கவனிச்சு அனுப்பிடுறியா...
இன்னைக்கு (ஆகஸ்ட் 11) சாயந்தரம் பஸ் ஸ்டாண்டுகிட்ட இருக்கற அந்த வக்கீல் ஆபீஸுக்கு வா என்கிறார்.
தொடர்ந்து `சார், அந்த ஆயில் மசாஜ் சொன்னீங்களே... அது எங்க சார்? என்று அந்தப் பெண் கேட்க, `அந்த வக்கீல் ஆபீஸுக்கு வந்துடு என்கிறார்.
தொடர்ந்து `எண்ணெய் நான் வாங்கி வரட்டுமா? என்று அந்தப் பெண் கேட்க, `அதையெல்லாம் பார்த்துக்கலாம்.
சாயந்திரம் 5 மணிக்கு வந்துடு. நான் வெயிட் பண்றேன் என்று இணைப்பைத் துண்டிக்கிறார்.
மாலை 5 மணிக்கு பேருந்து நிலையத்தில் அந்த தலைமைக் காவலர் காத்திருக்க, இறைவி அமைப்பினருடன் எஸ்.பி அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் அந்த இளம்பெண்.தற்போது அந்தப் பெண்ணையும், இறைவி அமைப்பின் நிர்வாகிகளையும் செல்போனில் தொடர்பு கொண்டு
என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கை வீணாப் போயிடும் என்று கண்ணீர்விட்டு வருகிறாராம் அந்த தலைமைக் காவலர்.
பெண் தேடுவதாக சொல்லி 50 பெண்களை சீரழித்த உளவுத்துறை அதிகாரி மகன் !
`கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்ற புகாருடன் காவல் நிலையம் செல்லும் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தரும் சேவையை புதுச்சேரி காவல்துறை எப்போது தொடங்கியது?
என்று அதிசயித்துக் கேட்கும் லாஸ்பேட்டை பகுதி மக்கள், `காவல் நிலையங்கள் அனைத்தும் முழுமையான
சிசிடிவி கண்காணிப்புக்குள் வந்தால் மட்டுமே இப்படியான தவறுகளை தடுக்க முடியும் என்கின்றனர்.
`சரக்கு என்ற அடைமொழியுடன் வலம் வரும் இந்தக் காவலர், முழு நேரமும் போதையில் இருப்பவராம்.
கடந்த 2013-ம் ஆண்டு புதுச்சேரி காவல்துறை குறித்துச் செய்தி வெளியிட்ட பத்திரிகை நிருபரை தொலைபேசியில் மிரட்டியதற்காக அப்போதைய டி.ஜி.பி காமராஜிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் இறைவி பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் காயத்ரி ஸ்ரீகாந்தியை தொடர்பு கொண்டோம்.
`குடும்பத் தகராறுகளுக்காக அணுகும் பெண்களை மகளிர் காவல் நிலையங்கள் கைவிட்டு விடுகின்றன.
அதனால் காவல் நிலையங்களுக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு பதிலாக,
அவர்களின் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தும் வேலைகளில் தான் சில காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இந்தப் பெண்ணின் விவகாரத்திலும் அது தான் நடந்திருக்கிறது.
கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !
கணவர் மீது புகார் கொடுப்பதற்காகச் சென்ற போது அங்கிருந்த காவலர் ஆயில் மசாஜ் செய்ய அழைத்திருக்கிறார்.
அத்துடன் தனது இரண்டு செல்போன் எண்களையும் கொடுத்து, தானே விவாகரத்து வாங்கித் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதற்காக ஒரு வழக்கறிஞரின் அறைக்கு வருமாறும் அழைத்திருக்கிறார்.
அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
ஹைடெக் ஏமாற்று வேலையிலிருந்து தற்காத்துக் கொள்ளுவது எப்படி?
இந்தக் குறிப்பிட்ட காவலர் இது போன்று தொடர்ந்து மோசமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வருகிறது.
இந்தப் பெண்ணைப் போல வேறு யாராவது பாதிக்கப் பட்டிருந்தால், அவர்களும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
Thanks for Your Comments