இனி போலீசார் கையில் ரிமோட் வைத்து சிக்னலை கட்டுப்படுத்துவர் !

0

கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு உள்பட பல்வேறு இடங்களில், 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. 

இனி போலீசார் கையில் ரிமோட் வைத்து சிக்னலை கட்டுப்படுத்துவர் !

இந்த சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, போலீசாரே சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !

இதனால், அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் ரோட்டில், தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சிக்னல்கள், போலீசார் பணியில் இல்லாத போது தானியங்கி முறையில் 'டைமர்' வைத்து இயங்கி வருகின்றன.

போக்குவரத்து போலீசார் ஒரே இடத்தில் அமர்ந்து சிக்னல்களை இயக்குவதால், சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக சிக்னலை கடப்பது போன்ற விதிமீறல்கள் நடக்கின்றன. 

தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?

இதனை, போலீசார் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து, கீழே இறங்கி வந்து தடுக்க முடியாததால், விதிமீறல் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது, போலீசார் ரோட்டில் நடந்து கொண்டே, 'ரிமோட்' மூலம் சிக்னல்களை இயக்கும் வகையிலான திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது: 

முதற் கட்டமாக சோதனை முறையில், டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட காரணம் !

இங்குள்ள போக்குவரத்து போலீஸ்காரர் கையில் ரிமோட் வைத்துக் கொண்டு, சிக்னலை இயக்குவார். 

இவர் கூண்டில் அமராமல், ரோட்டில் நடந்து கண்காணித்துக் கொண்டே சிக்னலை இயக்கலாம். 

இனி போலீசார் கையில் ரிமோட் வைத்து சிக்னலை கட்டுப்படுத்துவர் !

போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டில் நிற்பதால், சிக்னல் விதிமீறல்கள் கட்டுப் படுத்தப்படும். இதை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக பிடிபடுவார்கள்.

இந்த சென்சார் மூலம், சிக்னலில் இருந்து 100 மீட்டர் துாரம் வரை ரிமோட்டை இயக்க முடியும். 

ஹெர்னியா ஏற்பட அடிப்படை காரணம் !

அடுத்த கட்டமாக, லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். அதன்பின், படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings