சமூக வலைத்தளங்களில் இதை பதிவிட்டால் ஆக்சன் தான்.. கவனம் மக்களே !

0

சமூக வலைத்தளங்களில் என்னென்ன மாதிரியான போஸ்ட்களை செய்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் இதை பதிவிட்டால் ஆக்சன் தான்.. கவனம் மக்களே !
சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு ஸ்பெஷல் குழு ஒன்றையும் நியமித்துள்ளது. 

தமிழ்நாடு காவல் துறையின் டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தனது அதிரடியை தொடங்கி விட்டார். 

தமிழ்நாடு முழுக்க ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பதற்காக ஒரு பக்கம் தீவிர முயற்சிகளை சைலேந்திர பாபு எடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த நிலையில் தான் இன்னொரு பக்கம் “கிளீன் சோஷியல் மீடியா” என்ற முயற்சியில் தமிழ்நாடு அரசு குதித்து இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் மோசமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. 

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை நேற்றுதான் அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

அதன்படி ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எதிராக அநாகரீகமாவும்,

தமிழ்நாடு முழுக்க ரவுடியிசம்

அவதூறாகவும் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. 

சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்ட் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

கடந்த 2 மாதங்களாக சமூக வலைத்தளங்களில் நடந்த விஷயங்களை நோட்டமிட்ட பின்பு தான் போலீஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2 மாதமாக சமூக வலைத்தளங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றங்கள், பொய் செய்திகள், அவதூறு பிரச்சாரங்கள் என்று 

தமிழ்நாடு காவல்துறை

அனைத்தையும் தீவிரமாக கண்காணித்த பின்பு தான் தற்போது தமிழ்நாடு போலீஸ் ஆக்சனில் இறங்கி உள்ளது. 

கடந்த சில வாரங்களில் நடைபெற்ற பெரிய கைதுகளான கிஷோர் கே சாமி கைது, பப்ஜி மதன் கைது, சாட்டை துரைமுருகன் கைது என்று அனைத்தும் சமூக வலைத்தள குற்றங்களோடு தொடர்பு கொண்டதுதான்.

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்ததன் விளைவாக இந்த கைதுகள் நடந்தன. இனியும் சமூக வலைத்தளங்களில் 

இதே போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவில் முடிவில் அரசு இறங்கி உள்ளது. 

அதன்படி இனி சமூக வலைத்தளங்களில் என்னென்ன மாதிரியான போஸ்ட்களை செய்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற லிஸ்டும் வெளியாகி இருக்கிறது.

லிஸ்ட்

என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற லிஸ்டும் வெளியாகி இருக்கிறது

தமிழ்நாடு அரசு இனி பின்வரும் போஸ்ட்களை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது.

சாதி ரீதியான வன்முறையை தூண்டும் போஸ்ட்கள்

பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக பேசுதல்.

பொய்யான செய்திகளை தெரிந்தே பரப்புவது.

அவதூறு பரப்பும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது.

மதம் சார்ந்த மோதலை ஏற்படுத்தும் வகையில் போஸ்ட் செய்வது.

அரசியல் தலைவர்கள் குறித்து பொய்யான வதந்தி பரப்புவது, அசிங்கமாக பேசுவது, அவதூறு பரப்புவது.

மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் பொய்யான கருத்துக்கள், தகவல்கள் அடங்கிய வீடியோக்களை வெளியிடுவது.

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியாக வீடியோக்களை வெளியிடுவது, பதிவுகளை மேற்கொள்வது, ஆகிய போஸ்ட்கள் செய்தால் நடவடிக்கை பாயும்.

சமூக வலைத்தளங்களில் இதை பதிவிட்டால் ஆக்சன் தான்.. கவனம் மக்களே !

இதற்கான சட்ட பிரிவுகளையும் தமிழ்நாடு காவல்துறை தயார் செய்துள்ளது. அதன்படி ஐபிசி பிரிவு 499, 500, 294, 509, ஐடி விதி 67, 66 ஓ ஆகிய சட்டங்கள் பாயும். 

குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தால் இனி போக்ஸோ சட்டம் பாயும். 

அதோடு தொடர்ந்து தவறான போஸ்ட்களை செய்து, வதந்திகளை பரப்பி வந்தாலும், அரசியல் ரீதியான ஆதாயத்திற்காக பொய்களை பரப்பினாலும் குண்டாஸ் பாயும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்ற முதல் வாரத்தில் இருந்து, கடந்த 2 மாதமாக பல்வேறு சமூக வலைதள கணக்குகள் இந்த குற்றங்களின் கீழ் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். 

டிவிட்டர், பேஸ்புக், யூ டியூப் கணக்குகள் மொத்தமாக லிஸ்ட் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவு தனி குழுவையும் அமைத்து இருக்கிறது.

இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட கண்காணிப்பில் சிக்கியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறார்கள். 

முக்கியமாக அரசுக்கு எதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியவர்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியவர்கள் மீது வரும் நாட்களில் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.

சில பெரிய புள்ளிகளும் இந்த ஆபரேஷன் மூலம் கைது செய்யப்படலாம் என்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் புரளிகள், அவதூறுகள் பரவுவதை அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

முக்கியமாக பல்வேறு மாநிலங்களில் அரசுகளுக்கு எதிராக திட்டமிட்ட அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

அது போன்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதை தடுக்கும் விதமாகவே இந்த ஸ்பெஷல் டீம் களமிறங்கி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings