டிக்டாக் பிரபலங்களுக்கு என்ன தான் பிரச்னை? மனநோயின் வெளிப்பாடா?

0

டிக்டாக்' செயலி மூலம் பிரபலமான புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

டிக்டாக் பிரபலங்களுக்கு என்ன தான் பிரச்னை? மனநோயின் வெளிப்பாடா?

அதில், ` என்னுடைய யூடியூபை முடக்கப் போறாங்களா.... முடக்கட்டும். நான் தவறான வழிக்குப் போவேன், சத்தியமாக செல்வேன். 

என் மீது பாலியல் வழக்கு போட்டால் தீக்குளிப்பேன்' எனப் பகிரங்கமாக சவால் விட்டார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

என் அழகை இழந்தேன்... குழந்தையை சித்ரவதை செய்த தாய் சொன்ன அதிர்ச்சி காரணம் !

அவர் பதிவிட்ட வீடியோவில் கருத்துப் பதிவிட்ட பலரும் சூர்யாவை விமர்சனம் செய்திருந்தனர். 

இதே பெண்மணி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

மனநோயின் வெளிப்பாடா?

மனநோயின் வெளிப்பாடா?

இது ஒருவகையான மனநோயின் வெளிப்பாடு. அதனால்தான் இவர்கள் மீது காவல்துறையில் தொடர்ச்சியான புகார்கள் பதியப்படுகின்றன. 

நமது திறமைகளை மற்றவர்கள் பேச வேண்டும் என்பது மனிதனின் பொதுவான எண்ணமாக உள்ளது. 

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு !

அதாவது, தாம் பாராட்டப்பட வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர். இதனை Positive Reinforcement என்று சொல்கிறோம். 

நேர்மறையாக நம்மை நாமே ஊக்குவித்துக் கொள்வது. இந்த அடிப்படையான மனித ஆசையில் இருந்து தான் இவர்களைப் போன்ற நபர்கள் உருவாகின்றனர். 

திறமையைக் காட்டுகிறேன்' என்ற பெயரில் நடமாடுவது, பாடுவது அல்லது தானாக எதையாவது செய்து வீடியோ பதிவிடுவது எனச் செயல்படுகின்றனர்.

இவற்றை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். அந்த வீடியோக்களுக்கு லைக்குகளும் ஷேர்களும் விழத் தொடங்கும் போது இதில் தொடர்புடையவர்கள் வெறி பிடித்தவர்களாகவே மாறிவிடுகின்றனர். 

இவர்களிடம் ஆளுமைக் கோளாறு உள்ளதையும் பார்க்க முடிகிறது. அதனால்தான், செய்யக் கூடாத விஷயங்களை பொது வெளியில் செய்வதும் 

துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள வீட்டை கன்ட்ரோல் பண்ண பாலிகாப் HOHM ஆட்டோமேஷன் ! 

அதனை சிலர் பாராட்டுவதால் போலீஸாரையே வைத்து காமெடி செய்வதும் தொடர்ந்து நடக்கின்றன என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி.

ஆபாசமாகப் பேசுவது ஏன்?

ஆபாசமாகப் பேசுவது ஏன்?

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக மேலதிக விவரங்களைப் பட்டியலிட்டார்.  தங்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் கூட்டத்தைப் பார்த்து புகழ் போதைக்கு சிலர் ஆட்படுகின்றனர். 

ஆனால், பலரும் அவர்களைத் தூற்றிக் கொண்டிருப்பதை மறந்து விடுகிறார்கள். 

தாயே குழந்தையை சித்திரவதை செய்யும் காணொளி நேற்று வைரலானது... தாய் கைது !

இது போன்ற வீடியோக்களால் முதலில் புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டவர்கள், பின்னர் பணம் வருவதை அறிந்து கொண்டனர். 

தங்களின் சேனல் மானிடைஸ் ஆனதும், வீட்டில் உட்கார்ந்தபடியே பணம் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர். இதனைக் கவனிக்கும் படித்தவர்களும் அதில் விழுகிறார்கள். 

நான் கார் வாங்கி விட்டேன், வீடு வாங்கி விட்டேன்' எனச் சிலர் பதிவிடுவதைப் பார்த்து மற்றவர்களும் அவர்களின் வழியைப் பின் தொடர்கின்றனர்.

இதில் கொடுமையான விஷயம், படித்த பெண்கள் பலரும் உடலை மையமாக வைத்து முகம் சுழிக்க வைக்கும் நடனங்களை காணொளிகளாக பதிவிடுவது தான். 

இவர்களுக்கு ஏன் இந்த வெறி?' என்ற எண்ணம் தான் இதனைப் பார்க்கும் பலருக்கும் தோன்றுகிறது. 

ஒரு கட்டத்தில் அவர்களை பின்தொடரும் நபர்களிடம் இருந்து தொல்லை வரும்போது, காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

தாலிபனுக்கு தண்ணி காட்டும் துணிச்சலான பஞ்சர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் வரலாறு ! 

இவர்கள் அவ்வாறு செய்வதால்தான் புகார் வரையில் நீள்கிறது. `டிக்டாக்' பிரபலங்களாக இருக்கும் பலர் மீதும் காவல்துறையில் ஏராளமான புகார்கள் உள்ளன. 

தங்கள் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சிலர் ஆபாசமாகப் பேசுகின்றனர். 

இவர்களில் நிறைய பேர் மது முதலான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக உள்ளனர் என்கிறார்.

டிக்டாக் பிரபலங்களுக்கு என்ன தான் பிரச்னை? மனநோயின் வெளிப்பாடா?

மேலும்,  டிஜிட்டல் உலகில் கிடைக்கும் போதை என்பது மது முதலான போதைகளுக்கு அடிமையாவதைப் போலத்தான். 

நமக்குத் தெரியாமலேயே இதில் மூளையின் பங்கும் பெரியளவில் உள்ளது. 

இதற்கு சட்டரீதியான ஒரு பாதுகாப்பை போடா விட்டால் அவர்கள் பேசுகின்ற ஆபாசங்கள் எல்லாம் எல்லை மீறிவிடும். 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?

தற்போது சிறார்களிடையே ஆபாச வீடியோக்களை பார்ப்பது அதிகரித்து வருகிறது. 

போலி ஐ.டிகள் மூலம் பலரும் உலா வரும் சூழலில், சில பிரபலங்கள் குழந்தைகளை பாதிக்கும் அளவுக்கான செயல்களைச் செய்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings