பொதுவாக நமது சமூகத்தில் குழந்தை பெற்றெடுப்பது பெண்களுக்கு ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்கு மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
குழந்தை பெற்ற பிறகு அதை வளர்ப்பதில் பெரும்பங்கு பெண்கள் மீதே விழுகிறது.
இந்தியாவில் பெருமளவு பெண்கள் சிறிய வயதில் திருமணம் செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஆகவே அவர்களது படிப்பை பாதியில் விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பர்மா உணவு அத்தோ செய்வது எப்படி?
இதனால் சரியான வேலை மற்றும் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் கணவரிடமும், கணவர் குடும்பத்தையும் சார்ந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன, என்றார் அவர்.
ஆண்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, பிடித்த விஷயத்தில் நேரம் ஒதுக்குவது போன்றவற்றால் தங்கள் மன உளைச்சலை தணித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் பெண்களுக்கு அதற்கு உண்டான வாய்ப்பு அமைவதில்லை. இதனால் அவர்களது மன உளைச்சல் அதிகமாகிறது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை குழந்தையின் தாய்க்கு மனநல பிரச்சனை இருப்பதாக சந்தேகம் உள்ளது.
ஏனென்றால் சராசரியாக இருக்கக்கூடிய தாய்மார்கள் தன் குழந்தையை அடித்து, அதை வீடியோ பதிவு செய்ய மாட்டார்கள்.
புரதம் கொண்ட சோயா கிரேவி செய்வது எப்படி?
குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள். மனநல பிரச்சினை இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.
இவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தாலும், அவர் மனநலத்தை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியமானது, என்றார் மருத்துவர் சுனில் குமார்.
தவிர்க்க என்ன செய்வது?
மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஆண்-பெண் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்படும்.
இதன் மூலம் திருமணம் பற்றிய புரிதல் இருவருக்கும் ஏற்படும்.
உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக திருமணத்திற்கும், குழந்தை பெற்றெடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்களா என்பதையும் கண்டறிய முடியும்.
குழந்தை பெற்றெடுப்பதற்கு முன்பு குழந்தை வளர்ப்பதற்கான தகுதி உள்ளதா? பொருளாதார பின்னணி இருக்கிறதா?
தக்காளியை சமைக்காமல் சாப்பிட்டால் நம் உடலில் என்ன நடக்கும்?
அந்த குழந்தையை வளர்ப்பதற்கு செலவிட நேரம் இருக்கிறதா? குழந்தையைப் பாதுகாக்கும் சூழல் உள்ளதா?
என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து திருமணம் செய்து கொள்வதே உசிதமானது.
இவை யெல்லாம் நடைபெறாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
குழந்தைக்கு உண்டான மனக் காயத்தைப் போக்க என்ன வழி?
இந்த சம்பவம் குழந்தைக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை அமைத்து கொடுப்பது மட்டுமேயாகும்.
வெயில் காலத்திற்கு குளுமையான மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி?
அதாவது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அந்த குழந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத சூழ்நிலையை
அமைத்து கொடுப்பது தான் சிகிச்சை, என மருத்துவ உளவியலாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments