நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !

0

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கால் திமிங்கல இனம் அழிந்துபோன ஒரு திமிங்கல வகையினை சேர்ந்தது. 

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !
இது 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலத்தின் புதைபடிவங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இந்த புதைவடிவம் எகிப்தின் மேற்கு பாலைவனப் பகுதிகளின் 'ஃபேம் டிப்ரஷனின்' ஈசீன் பாறைகளின் இடுக்கில் கிடைத்துள்ளது.

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்... எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

இந்த ஈசீன் பாறைகள் ஒரு காலத்தில் கடலால் மூடப்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. திமிங்கலங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இங்கே இதுவரை கிடைத்துள்ளன. 

ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் (amphibious Phiomicetus anubis) என்று பெயரிடப்பட்ட இந்த புதிய திமிங்கலம், 

மூன்று மீட்டர் (10 அடி) மற்றும் 600 கிலோ (1,300 பவுண்ட்) உடல் எடை கொண்டதாக ஆராய்ச்சியாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. 

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !
மேலும் இது ஒரு சிறந்த வேட்டையாடும் ரக திமிங்கலம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

அதன் எலும்புக்கூடு பகுதிகளை ஆராய்ந்ததில், ஆப்பிரிக்காவில் இருந்து உருவான மிகவும் பழமையான புரோட்டோசெடிட் வகை என்று தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. 

நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை ! 

அதற்கு அர்த்தம், பிரமிடுகளில் புதைக்கப்படும் மம்மி எனப்படும் நாகரிகத்தையும், எகிப்தின் பண்டைய கால வாழ்க்கையுடன் தொடர்புடைய நாய்-தலை கொண்ட எகிப்திய கடவுளான அனுபிஸைக் குறிக்கிறது. 

அதனாலேயே அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் திமிங்கலங்களின் மூதாதையர்கள், மான் போன்ற பாலூட்டிகளில் இருந்து வந்தவை. 

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !

இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. 

இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

அந்த திமிங்கலத்தால் நிலத்தில் நடக்கவும், நீரில் நீந்தவும் முடிந்து இருக்கிறது.

அந்த உயிரினத்தில் ஒரு பகுதி எலும்புக் கூடுகள், எகிப்து நாட்டில் இருக்கும் ஃபயூம் டிப்ரஷன் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதை மன்சோரா பல்கலைக்கழகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். 

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !

"ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்பது ஒரு முக்கியமான புதிய திமிங்கல இனம், இந்த கண்டுபிடிப்பு எகிப்து மற்றும் 

ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் முக்கியமானது" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான அப்துல்லா கோஹர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? 

இதை விட ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், இப்படி கால்கள் கொண்ட திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது தான். 

ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம், நிலத்திலும் நீரிலும் வாழ்ந்த திமிங்கலங்களில் ஆரம்ப காலத்தவையாக கருதப்படுகிறது.

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !

சுமார் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பாறைகள் ஆன 'ஃபேம் டிப்ரஷனி'ல் உள்ள கண்டுபிடிப்புகளுள், பார்ப்பதற்கு பாதி முதலை போன்ற 

திமிங்கலங்கள் முதல் மாபெரும் நீர்வாழ் திமிங்கலங்கள் வரை அத்தனை பரிணாம வளர்ச்சி கொண்ட 

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

திமிங்கல வகைகளும் கிடைத்துள்ளன என்று எகிப்திய சுற்றுச்சூழல் விவகார முகமையின் முகமது சமே கூறினார்.

திமிங்கலங்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்காசியாவில் பரிணாம வளர்ச்சி கண்டு உருவானதாக கருதப்படுகிறது. 

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் கண்டுபிடித்த எகிப்து விஞ்ஞானிகள் !

கடந்த 2011ஆம் ஆண்டு வரலாற்றுக்கு முந்தைய கால உயிரினங்களைக் குறித்து ஆராயும் ஒரு அணி பெரு நாட்டில் விரல்கள் ஒட்டிய நிலையில் இருக்கும் நான்கு கால்கள் கொண்ட,

43 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதை படிவத்தை கண்டு பிடித்தார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

முடிவில், ஒட்டுமொத்த விஞ்ஞான சமூகமம் இந்த இனத்திற்கான தென் அமெரிக்க பதிவுகளைக் காண ஆர்வமாக உள்ளது 

மற்றும் திமிங்கல பரிணாமம் தொடர்பான வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதைக் காண ஆர்வமாக உள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings