நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு தொற்று பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறியதை அடுத்து, மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகளை திறக்க தொடங்கியுள்ளன.
ஹைடெக் ஏமாற்று வேலையிலிருந்து தற்காத்துக் கொள்ளுவது எப்படி?
இதற்கென பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்துள்ள அவர்கள்,
அரசு உத்தரவின் பேரில் கொரோனா விதிகளையும் பின்பற்றி வகுப்புகளை முழுவதுமாக சுத்தப்படுத்தி யுள்ளனர்.
அதன் பேரில் பெற்றோர்களின் அறிவுறுத்தலின் கீழ் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பஞ்சாபில் ஒன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?
இதனிடையே பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஒரு மேசைக்கு ஒரு மாணவர் வீதம் அமரவும், கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது மாணவர்களே தங்களுக்கு சொந்தமாக கிருமி நாசினி மற்றும் சுத்தமான முககவசம் அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கூஸ்கூஸ் கேக் செய்வது எப்படி?
ஒவ்வொரு வகுப்புகளிலும் 50 சதவீதம் மாணவர்களே அனுமதிக்கப்படுவர் என பள்ளிகள் சார்பில் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks for Your Comments