புலி என்ற பெயரைக் கேட்டாலே படையும் நடுங்கும் இருப்பினும், புலியுடன் போராடி உயிர் பிழைத்த வெற்றிக் கதைகளும் உண்டு.
ஆனால் காடுகளில் புலிகள் மனிதனின் கண்களுக்கு அவ்வளவு எளிதாக அகப்பட்டு விடாது.
ஏனென்றால் நாம் எல்லோரும் பார்த்து பயப்படும் புலிகள் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்ட உயிரினம் என்பது தான் உண்மை.
மனிதனின் வாசம் அதற்கு தெரிந்தவுடன் நாம் இருக்கும் பக்கமே வராது. அதனால் தான் புலிகள் காப்பக சுற்றலாக்களில் கூட புலிகளை காண்பது என்பது அறிதான நிகழ்வாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட புலிகளில் சில மனிதர்களை விரும்பும். அவ்வாறான புலிகளை தான் நாம் "மேன் ஈட்டர்" என அழைப்போம்.
சுதந்திரத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் இருந்தே இந்தியாவில் "மேன் ஈட்டர்" தொடர்பான கதைகள் ஏராளம்.
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்ய கூடாது !
வேட்டையாடியும் காட்டுயிர் ஆர்வலருமான ஜிம் கார்பேட் மேன் ஈட்டர் புலிகள் குறித்த நிஜக் கதைகளை எழுதியுள்ளார்.
வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க...!
சிறுத்தைகளை வைத்து எழுதிய "ருத்ரபிரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தைகள்" ஆகிய புத்தகங்கள் சூழலியலாளர்களுக்கு இப்போதும் ஓர் கையேடு என்றே கூறலாம்.
தமிழகத்தில் கூட "மேன் ஈட்டர்" புலிகள் அண்மையில் கூட இருந்தன. இங்கு 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது.
இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை.
வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க இதை செய்யுங்க !
அண்மையில் மகாராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்பட்ட ஆவ்னி என்ற பெண் புலி 13 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் புலியை அம்மாநில வனத்துறை சுட்டுக் கொன்றது.
எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?
உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்று விடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்பு தான் உண்ணும்.
அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள்.
வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?
மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது.
எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்து விட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறி விடும்.
ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அப்படிப்பட்ட புலியால் நடந்த சில குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். பங்களாதேஷில் வசிக்கும் ஹஷ்மோத் அலி, 2016 ஆகஸ்டில் புலியால் தாக்கப்பட்டார்.
இதனால் அவரது முகம் முற்றிலுமாக சிதைந்து போனது. காட்டிற்குள் பயணம் மேற்கொண்ட போது, ஹஷ்மோத் அலி தனது படகில் தூங்கிக் கொண்டிருந்த போது, புலி வந்து அதன் நகங்களால் தாக்கியது.
ஒரு பக்கம் முகத்தில் பாதியை கடித்து குதறி விட்டது. ஹஷ்மோத்தின் அலறல் சத்தம் கேட்டு, சுற்றியுள்ள மக்கள் வந்த பின் புலி தப்பி ஓடியது.
காட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஹாஷ்மோத்தை அழைத்துச் செல்ல சுமார் ஆறு மணி நேரம் ஆனது,
சவாசனம் பயிற்சி செய்வது எப்படி?
2014 ஆம் ஆண்டில், பிரேசிலிய மிருகக்காட்சி சாலையில் 11 வயது சிறுவன் ஒரு தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற போது புலியால் தாக்கப்பட்டான்.
ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கையின் ஒரு பகுதியை துண்டிக்க வேண்டியிருந்தது.
ஜனவரி 2017 இல், சீனாவில் ஒரு மிருகக்காட்சி சாலையில் ஒரு சுற்றுலாப் பயணி மூன்று புலிகளால் தாக்கப்பட்டு அவரது மனைவி மற்றும் குழந்தையின் முன்னால் கொல்லப்பட்டார்.
இதன் போது, மிருகக்காட்சி சாலையின் காவலர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி புலிகளை விரட்டினார்கள். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
2015 ஆம் ஆண்டு நவம்பரில், விவசாயி ஒருவர் இந்தியாவின் கார்பெட் அருகே உள்ள பரப்பூர் கிராமத்தில் தனது ஆடுகளை மேய்க்கச் சென்ற போது, அவரை ஒரு புலி தாக்கியது.
ஆனாலும் புலியை கொன்றார். ஜூலை 2020 இல், சூரிச் மிருகக்காட்சி சாலையில், ஒரு புலி சுற்றுலாப் பயணிகளின் முன்னால் ஒரு பெண்ணை தாக்கி, குதறிக் கொன்றது.
சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?
புலி தாக்குதலை கண்டு, பயந்த பார்வையாளர்கள் அலறினர்.
மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் வந்து சேர சுமார் எட்டு முதல் ஒன்பது நிமிடங்கள் ஆனது. அந்த நேரத்தில் புலி அந்தப் பெண்ணை கொன்று விட்டது.
Thanks for Your Comments