மீண்டும் தலிபான்களின் அடக்குமுறை... இருளில் மூழ்கும் ஆப்கான் !

0

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் அமெரிக்கா படை வீரர்களின் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடைவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

மீண்டும் தலிபான்களின் அடக்குமுறை... இருளில் மூழ்கும் ஆப்கான் !
இதனால் அந்நாட்டை பயங்கரவாத குழுவான தலிபான்கள் கைகளின் வசம் ஆப்கானிஸ்தான் மீண்டும் பிடிபட்டுள்ளது. 

அந்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டி அரசின் ராணுவத்தால் தலிபான்களை எதிர்க்க முடியவில்லை. 

முன்பு அமெரிக்க வீரர்கள் இருந்ததால் கூட்டு சேர்ந்து திடகாத்திரமாக எதிர்த்தார்கள். தற்போது அதற்கு வழியில்லை.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் அதன்பின் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். 

அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் ஒடுங்கி, அடங்கி இருந்தனர். 

அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன் பின், புதிய அதிபராக வந்த ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கப்படும் என்று அறிவித்தார். 

இதன்படி, அமெரிக்கப் படைகளும், நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பகுதி வெளியேறி விட்டனர்.

மீண்டும் தலிபான்களின் அடக்குமுறை

இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். 

ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளைக் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். 

தற்போது ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான காந்தகார் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

நாட்டில் இரண்டாம் மிகப்பெரிய மாகாணம் இது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அடுத்து காந்தகார் அதிமுக்கியவத்துவம் வாய்ந்த மாகாணம். 

இதையே தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் காபூலை தவிர கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதுமே தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்றே அர்த்தம்.

காபூலையும் ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றே தெரிகிறது. 

நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அரசு கையறு நிலையில் இருக்கிறது. 

தலிபான்களின் அடக்கு முறைக்குப் பயந்து ஏராளமான ஆப்கான் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். 

இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியையும் கைப்பற்றி, சுங்கவரி வசூலித்து 

இருளில் மூழ்கும் ஆப்கான் !

அதன் மூலம் பணம் ஈட்டவும் தலிபான்கள் தி்ட்டமிட்டுள்ளனர். மே மாதத்திலிருந்து சுமார் 4 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா சுட்டிக் காட்டியுள்ளது. 

இது ஒட்டு மொத்த உலகிற்குமே மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறுகையில், போரை தொடங்க காத்திருக்கும் தலிபான்களுக்கு உலக நாடுகள் சார்பாக ஐநா ஒரு செய்தியைக் கூற விரும்புகிறது. 

ராணுவ பலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது ஒரு தோல்வியுற்ற கருத்தியல். 

இது நீடித்த உள்நாட்டு போர் அல்லது உலக நாடுகளிடமிருந்து ஆப்கானிஸ்தான் தனிமைப் படுத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும். 

ஆகவே தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். அப்போது தான் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.

கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட

தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். 

அவர்களுக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலிபான்கள் பக்கம் திரும்பியது. புஷ் ராட்சத பீரங்கிகளை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தார். 

ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அமெரிக்க படை வீரர்களும் அந்நாட்டு படை வீரர்களும் இணைந்து தலிபான்களை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டனர்.

இதில் அமெரிக்க-ஆப்கான் படைகள் வெற்றிவாகை சூடியது. அதிலிருந்து தலிபான்களின் ஆதிக்கம் குறைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக படைவீரர்கள் வாபஸ் பெறப்பட்டு வந்தனர். 

ஒபாமா காலத்திலிருந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அதிபர் பைடன் அதே பாணியில் மொத்த படைகளையும் வாபஸ் வாங்க முடிவெடுத்துள்ளார். 

இது ஒரு வெல்ல முடியாத போர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளுக்கு ராணுவ நடவடிக்கை தீர்வு அல்ல என்று கூறிய பைடன், இது ஒரு வெல்ல முடியாத போர் என்றார். 

ஆப்கானிஸ்தானைக் கட்டமைப்பது அந்நாட்டு மக்களின் வேலை; நாம் அதற்கு உதவ முடியுமே தவிர அங்கேயே இருக்க முடியாது என்றார்.

இன்னும் எத்தனை அமெரிக்க வீரர்களை நாம் பறிகொடுக்க போகிறோம். 

தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து வாடும் வீரர்களுக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் என உணர்ச்சிக்கரமாகப் பேசினார் பைடன். 

அவர் பக்கமும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது என அமெரிக்கர்கள் பலரும் பைடனுக்கு ஆதரவளித்து வருகின்றனர். 

ஆனால் போரை தொடங்கிய முன்னாள் அதிபர் புஷ், பைடனின் முடிவு மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என விமர்சித்திருந்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பூமியில் மிகவும் ஆபத்தான இடமாக ஆப்கானிஸ்தான் மாறி வருவதை நினைத்து வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷித் கான் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளில் கூறுகையில்  அன்பார்ந்த உலகத் தலைவர்களே! என்னுடை தேசம் முழுமையான நிர்வாக சீர்கேட்டில், குழப்பத்தில் இருக்கிறது. 

ரஷித் கான் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோள்

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் நாள்தோறும் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டுகளுக்கும் வீரமரணம் அடைகிறார்கள்.

எங்கள் மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள். 

எங்களை பெரும் குழப்பத்திலும், முழுமையான சீர்கேட்டிலும் கைவிட்டு விடாதீர்கள்.

ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கானிஸ்தானை அழிப்பதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி தேவை” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings