திரும்பும் பக்கமெல்லாம் தாலிபான்கள் குறித்த பேச்சு... யார் இந்த தாலிபான்கள்?

0

தற்போது திரும்பும் பக்கமெல்லாம் ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான்கள் குறித்த பேச்சு தான்.

திரும்பும் பக்கமெல்லாம் தாலிபான்கள் குறித்த பேச்சு... யார் இந்த தாலிபான்கள்?

சர்வதேச நாடுகள், ஊடகங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வை உற்று நோக்கி வருகின்றன. 

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற சில வாரங்கள் ஆகும் என அமெரிக்க உளவுத் துறை கணித்திருந்த நிலையில், 

600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !

இவ்வளவு எளிதாக அவர்கள் வெற்றியை சுவைப்பார்கள் என யாருமே நினைக்கவில்லை. 

ஒரே வாரத்தில் உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ள இந்த தாலிபான்கள் யார்? 

தாலிபான்களின் தலைவர்கள் யார்? என்கிற பூர்வீகத்தை பார்த்தால் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்த வரலாற்றில் தான் தொடங்க வேண்டும். 

தாலிபான்கள் யார்? 

தாலிபான்கள் யார்?

பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது சோவியத் யூனியன். அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப் போர்- மறைமுக யுத்தம் நெடுங்காலமாக நிகழ்ந்தது.

இந்த நிலையில் உலக நாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் சார்பு என பிரிந்தும் நின்றன. 

நம்மை தேடி வரும் உணவும் சந்தேகமும் !

இந்தியாவைப் போல இரு அணிகளிலும் சேராமல் அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன. 

1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தனர்.

1979-ல் இந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தது.

முஜாஹிதீன்கள் யார்? 

முஜாஹிதீன்கள் யார்?

அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப் பட்டவர்களே முஜாஹிதீன்கள்.  

இவர்கள் தாலிபான்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சோவியத் ஒன்றியத்துக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது. 

மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி !

அங்கிருந்து தான் ஜிஹாத், புனிதப் போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டு மொத்த அகிலத்தையும் ஆட்டுவிக்கும் பயங்கரவாத சொற்கள் அங்கிருந்தே பிறப்பெடுத்தன. 

சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக இஸ்லாம் போராளிகள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். 

இதனை அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது. ஆம் அமெரிக்காவுக்கு அப்போது தெரியாது தாம் வெட்டும் பயங்கரவாத புதை குழியில் தாமே சிக்கி நாசமாகப் போகிறோம் என்று.

பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்தது

பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்தது

10 ஆண்டுகள் சமாளித்துப் பார்த்தது சோவியத் ஒன்றியம்., பல்லாயிரம் ராணுவ வீரர்களை பொதுமக்களை பலிகொடுத்தது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற வேண்டிய சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டது. 

இதனால் 1988-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேறியது. 

உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல் !

அப்படி சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறிய போது அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. 

இந்த யுத்தங்களில் 10,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த யுத்தங்களில் பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்தது தான் உலகை குலைநடுங்க வைக்கும் தாலிபான்கள். 

ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த தாலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்தது. 

பாகிஸ்தான் மதராஸாக்களில் படித்தவர்கள் தாலிபான்கள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தாலிபான்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்து 1998-ல் தலைநகர் காபூலை கைப்பற்றினர். 

அப்போது ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தவர் புர்ஹானுதீன் ரப்பானி. ஆப்கான் முஜாஹிதீன் என்கிற அமெரிக்கா ஆதரவு அமைப்பின் தலைவர் தான் இந்த ரப்பானி. 

கடுமையான சட்டங்கள்

கடுமையான சட்டங்கள்

ரப்பானின் ஆட்சியை வீழ்த்தி விட்டு அதிகாரம் தாலிபான்கள் வசமானது. தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.  

அதாவது இஸ்லாமிய ஷரியா சட்டங்களை அமல்படுத்தினர். தொலைக்காட்சி, திரைப்படம், இசை என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. 

தண்டவாளம் இல்லாமல் வெள்ளை கோடுகளை பின்பற்றி செல்லும் உலகின் முதல் ரயில் !

பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளை அணிய வேண்டும், பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது. 

ஆண் துணை இல்லாமல் தனியாக வெளியே செல்லக்கூடாது என பெண் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. 

தொலைக்காட்சி, பாடல்கள், தடை செய்யப்பட்டதோடு இஸ்லாமிய  விடுமுறை அல்லாத பிற விடுமுறை நாட்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.

ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும்; பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும்; கல்லறிந்து கொல்லுதல், உடல் உறுப்புகளை வெட்டுதல், 

நடு ராத்திரியில பெட்ரூம் கதவை தட்டிய இன்ஸு... சீரழிந்த நடிகை நடந்தது என்ன?

பொது இடத்தில் தூக்கில் போடுவது என கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. தாலிபான்கள் ஆடிய ஆட்டம் உலகை உறைய வைத்தது.  

வான் தாக்குதல்

வான் தாக்குதல்

2001-ல் பாமியான் புத்தர் சிலையை தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்த காட்சிகள் இன்றளவும் ரணமாகவே இருக்கிறது. 

தாலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தன. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமிரேட்ஸ், செளதி அரேபியா ஆகியவை மட்டுமே அங்கீகரித்தன. 

டாப் ஆங்கிளில் கவர்ச்சி அவதாரம் எடுத்த மாளவிகா மோகனன்... ரசிகர்கள் அதிர்ச்சி !

பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தாலிபான்கள், பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாகவே மாறிப் போயினர். ஆப்கானில் அபின் போதைப் பொருளை தடை செய்ததும் தாலிபான்கள் தான்.

நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்துவதும் பிற நாடுகளின் தாக்கங்களை தங்கள் நாட்டில் இருந்து அகற்றுவதுமே  இவர்களின் நோக்கம்.

2001ம் ஆண்டு  செப்டம்பர் 17ம் தேதி  அமெரிக்காவில் அல்கொய்தா நடத்திய வான் தாக்குதல் இந்த நிலையை மாற்றியது. 

19 அல்கொய்தா தீவிரவாதிகள் 4 விமானங்களை  கடத்தி  உலக வர்த்தக மையம், பெண்டகன், வாஷிங்டன், பென்சில்வானியா ஆகிய இடங்களில் தாக்குதலை நடத்தினர். 

ரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம் கண்டறிவது எப்படி?

2,700க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். 

அல்கொய்தா 

அல்கொய்தா

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்தார்.

69 நாள் சூரியன் மறையாத தீவு !

இந்த தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத நடவடிக்கைகளை வேரோடு அழிக்க உறுதியேற்ற அமெரிக்கா, அதற்கான நடைமுறைகளில் இறங்கியது. 

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா குறி வைக்க காரணமே அல்கொய்தா தான்.  

அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தன. 

அல்கொய்தாவுக்கு தாலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும் ஆப்கானிஸ்தானை தங்களின் புகழிடமாக அல்கொய்தா பயன்படுத்துவதை தடுக்கவுமே அந்நாட்டின் மீது படை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

ஏ.டி.எம்.-இல் கேன்சல் க்ளிக் செய்தால் என்ன நடக்கும்?

அமெரிக்க படையெடுப்பால் தங்கள் ஆட்சியை இழந்த தாலிபான், அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது.

தாலிபான்களும் டொனால்ட் டிரம்பும்

தாலிபான்களும் டொனால்ட் டிரம்பும்

2017ம் ஆண்டு அமெக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் தாலிபான்கள் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். 

அதில், தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.  

பாலியல் இச்சைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள்.. ஆய்வில் அதிர்ச்சி !

எனினும் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படாமலேயே இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு தாலிபான்கள் மற்றும் டிரம்ப் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்கள் படைகளை விலக்கி கொள்வதாகவும் 5000 தாலிபான் கைதிகளை விடுவிப்பதாகவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. 

அதே போல், தங்கள் மண்ணில் இருந்து அல்கொய்தாவோ வேறு அமைப்புகளோ அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் 

நோயாளிகளுக்கும் உரிமை உண்டு !

தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தாலிபான்கள் ஒப்புக் கொண்டனர். எனினும், இந்த அமைதி ஒப்பந்தம் அமைதியை ஏற்படுத்தவில்லை.

தாலிபான் தலைவர்கள்

தாலிபான் தலைவர்கள்

மௌலவி ஹிபதுல்லா அகுந்ஸாதா தாலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. 2016ம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவர்,  

சுவையை தூண்டும் மட்டன் கறி செய்வது எப்படி?

அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அங்கீகாரம் படைத்தவராக உள்ளார்.

தலிபான் அமைப்பை நிறுவி அதன் முதல் தலைவராக இருந்தவர் முல்லா முகமது உமர் என்பவர். 

இவரின் தலைமையில் தான் 1996ல் முதல் முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. 

பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் முல்லா முகமது உமர் பலியானார்.  

நீரிழிவின் முதல் எதிரி செர்ரி பழம் !

முல்லா முகமது உமர் மரணத்துக்குப் பின்னர் தாலிபான்கள் இயக்கம் சிதறிப் போகாமல் இருக்கச் செய்தவர் மௌலவி ஹிபதுல்லா அகுந்ஸாதா.

தாலிபான்கள் தலைவர்களில் முக்கியமானவர் முல்லா அப்துல் கனி பார்தார். முல்லா முகமது உமரின் நெருங்கிய சகாவான பார்தார் தாலிபான் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராவார. 

இவர் 2010-ல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.  கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். 

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்து அந்தரத்தில் வீசி கொடுமை !

அந்த அமைப்பின் அரசியல் குழுவை கவனித்து வருகிறார். அண்மையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரையும் பார்தார் சந்தித்து பேசியுள்ளார். 

சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுடன் ஆட்சியை பிடித்த ரப்பானியின் மகன் சிராஜூதீன் ஹக்கானி. தாலிபான்கள் இயக்கத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். 

முல்லா உமரின் மகன் முல்லா யாகூப், தாலிபான்களின் ராணுவ பிரிவு தளபதி. இவர்களின் கட்டுப்பாட்டில் தான் தாலிபான்கள் இயக்கம் இருக்கிறது.

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டும் இருக்கின்றன. 

தாலிபான்கள் அரசாளப் போகும் இருண்ட காலத்தை நோக்கி ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுவிட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings