பாகிஸ்தானில் பெண் டிக்டொக் பிரபலத்தின் ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசி விளையாடிய கும்பலின் நடத்தையை பார்த்து பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது.
கிட்டத்தட்ட 400 பேர் அடங்கிய அந்த கும்பலிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை யெடுக்க வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டாக் பிரபலம். அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது அவர் வழக்கம். இதனால் ஏராளமான பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
தண்டவாளம் இல்லாமல் வெள்ளை கோடுகளை பின்பற்றி செல்லும் உலகின் முதல் ரயில் !
கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தைப் படம் பிடிப்பதற்காக, தனது நண்பர்கள் 6 பேருடன் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்த போது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வர்களை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் அவர்களை விரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த டிக்டாக் பிரபலம் தப்பிக்க ஓடினார். ஆனால், அந்தக் கும்பலில் சிலர் அவர் உடைகளை கிழித்தனர்.
அவரை அங்கும் இங்குமாகத் தள்ளினர். தரதரவென இழுத்தனர். மேலே தூக்கி வீசினர் இருந்தாலும் அதில் இருந்த சிலர், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றனர்.
காபூலில் விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் கீழே விழுந்து உயிரிழப்பு !
ஆனால், அவர்களாலும் முடியவில்லை. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.
இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த டிக்டாக் பிரபலம் நேற்று லாகூர் லாரி அட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் 400 பேர் கொண்ட கும்பல் தன்னையும் தன் நண்பர்களையும் கடுமையாகத் தாக்கிய தாகவும், உடைகளை கிழித்து இழுத்துச் சென்றதாகவும்,
டாப் ஆங்கிளில் கவர்ச்சி அவதாரம் எடுத்த மாளவிகா மோகனன்... ரசிகர்கள் அதிர்ச்சி !
அணிந்திருந்த நகைகளையும் நண்பரின் செல்போன், ரூ15 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
My eyes got wet after watching this video.
— Waqas Akhter 🗨 (@waqasakhter077) August 18, 2021
400 hundred beasts abused our sister ayesha in Lahore (Minar e pakistan).
I am ashamed to be a man after watching this video that our sisters are no longer safe.
I apologize to my sister on my behalf.🙏#minarepakistan#lahoreincident pic.twitter.com/NoK5WFD5dn
#minarepakistan incident made me cry, made me anxious. And then ayesha came out with her story.
— Eman Zahra🌎 (@eman_naal) August 18, 2021
Kr lo ab blame.
She’s so helpless pic.twitter.com/zPJ3B2KGvA
Thanks for Your Comments