இந்தியாவில் புல்லட் ரயில் கட்டுமான பணி அறிவிக்கப்பட்டு அப்படியே இருக்க, சீனாவில் தண்டவாளங்கள் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை சோதனை நடைபெற்று வருகிறது.
சீனாவின் ஜூஜோ நகரில் பொதுமக்கள் முன்பு சோதனை செய்யப்பட்ட போது, ஸ்மார்ட் ரயிலிற்கு மிகப்பெரிய கரகோஷம் அவர்கள் மத்தியில் எழுந்தது.
300 பேர் வரை பயணிக்கும் அளவுக் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மணிக்கு 70கி.மீ அல்லது 43 கி.மீ வேகத்தில் இயங்கும்.
ஸ்மார்ட் ரயில் என்று குறிப்பிட்டாலும், இந்த தொழில்நுட்பத்தை சீனா ’வேகமான தானியங்கி ரயில் சேவை’ என்று தெரிவிக்கிறது.
டிஎம்சி என்றால் என்ன? எவ்வளவு தண்ணீர் தெரியுமா?
உலகின் பெரிய ரயில் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் சிஆர்ஆர்சி கார்ப்பரேஷன் இந்த ஸ்மார்ட் ரயில் கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
12.3 அடி நீளம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், சாலையில் வரையப்பட்ட வரிசையான வெள்ளை நிற கோடுகளை பின்பற்றி இயங்கும்.
அந்த வெள்ளை கோடுகள் ஸ்மார்ட் ரயிலிற்கான மெய்நிகர் (வெர்ச்சுவல்) தண்டவாளங்களாக இயங்கும்.
இது பற்றி பேசிய ஸ்மார்ட் ரயில் கட்டுமானங் களுக்கான தலைமை பொறியாளர் ஃபெங் ஜியானிங்குவா,
ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவி !
சாதரண ரயில் டிராம்களுக்கான தண்டவாளங்களை விட இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் மிகவும் செலவு குறைவு என்று கூறுகிறார்.
ஆனால் வெறும் 11.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு சீனாவின் ஜூஜோ நகரில் ஸ்மார்ட் ரயிலிற்கான மெய்நிகர் கோடுகள் உருவாக்கப் பட்டுள்ளன.
பயணங்களுக்கான தகவல்களை சென்சார்கள் கொண்டு திரட்டி, செல்லக் கூடிய வழிகளை தானாகவே அறிந்து செயல்படுமாம் இந்த ஸ்மார்ட் ரயில்கள்.
ரேஷன் அரிசியில் இடியாப்பம் வீட்டில் இருந்தே செய்வது எப்படி?
ஜூஜோ நகரில் நடைபெற்று வரும் முதற்கட்ட சோதனையின் மூலம் சீன அரசு மகிழ்ச்சி அடையும் முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
அனைத்து விதமான சோதனைகள் முடிக்கப் பெற்று, ஸ்மார்ட் ரயில்கள் சீனாவில் அடுத்தாண்டு வசந்த காலம் முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்க உள்ளன.
குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி?
ஸ்மார்ட் ரயில் திட்டத்தில் கிடைக்கும் முடிவுகளை வைத்து, எதிர் காலத்தில் புல்லட் உட்பட அனைத்து ரக ரயில் போக்கு வரத்துகளையும் ஆளில்லாமல் இயக்க சீனா அரசு திட்டமிட்டு வருகிறது.
Thanks for Your Comments