யாஷிகாவிற்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், காலில் மிகப்பெரிய கட்டுடன், மருத்துவமனை படுக்கையில் படுத்தியிருக்கும் போட்டோவை வெளியிட்டார்.
கடந்த ஜூலை 25ம் தேதி புதுச்சேரிக்கு நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பும் போது அதிவேகமாக ஓட்டியதால் யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதே போல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். காரை யாஷிகா வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
சீட்பெல்ட் அணியாத நிலையில் காரை அதிவேகமாக அவர் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மீடியனில் பயங்கரமாக மோதி, பல முறை உருண்டு, சாலையின் ஓரம் கவிழ்ந்துள்ளது.
இதில் இடுப்பில் பல இடங்களிலும், வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட யாஷிகாவிற்கு பல சர்ஜரிகள் செய்யப் பட்டுள்ளது.
சுயநினைவிற்கு வந்த பிறகு தோழி உயிரிழந்ததை கேட்டு மனமுடைந்த யாஷிகா, இன்ஸ்டாகிராமில் மிக உருக்கமாக கருத்து பதிவிட்டார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து அவரே அப்டேட் வெளியிட்டார். அது பலரையும் கலங்க வைத்தது.அதில் அவர், எனது இடுப்பு மற்றும் கால் பகுதியில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
என்னால் வலது புறமோ அல்லது இடது புறமோ திரும்பக் கூடாது முடியாது. அதே போல் தான் இன்னும் சில நாட்கள் நான் கழிக்க வேண்டும். பின் பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
விபத்தில் யாஷிகாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாம். உடலின் பெரும்பாலான பகுதிகளில் பேண்டைட் போடப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகாவின் ஃபோட்டோ வெளியானது.
அதே சமயம் யாஷிகாவிடம் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. யாஷிகாவின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
Thanks for Your Comments