மோடியை அவதூறாக பேசியவரை சென்னை வந்து தூக்கி சென்ற உ.பி. போலீஸ் !

0

மாதவரத்தில் இருந்து கொண்டு உத்தரபிரதேச அரசு தொடர்பாகவும், பிரதமர் மோடி தொடர்பாகவும் யூடியூபில் அவதூறு வீடியோ பதிவிட்ட ஆசாமியை 

மோடியை அவதூறாக பேசியவரை சென்னை வந்து தூக்கி சென்ற உ.பி. போலீஸ் !
உத்தரப்பிரதேச காவல் துறையினர் சென்னைக்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். சென்னை மாதவரத்தில் கடந்த 30 வருடங்களாக வசித்து வருபவர் மன்மோகன் மிஸ்ரா (62). 

இவருக்கு சொந்தமாக உத்திர பிரதேசம் மாநிலத்தில் மடம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது அங்கு சென்று வருவார் என்றும் கூறப்படுகிறது.  

இவர் தன்னைத் தானே குருஜி என்று அழைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 

இவர் மன்னடி தம்புச்செட்டி தெருவில் பாரத சுவாமி மகான் சுதேசி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இவர் யூடியூப் இணைய தளத்தில் மன்மோகன் மிஸ்ரா என்ற பெயரில் கணக்கு தொடங்கி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தும், பிரதமர் மோடியை கடுமையாக திட்டியும் யூடியூபில் வீடியோ வெளியிட்டார்.

கடந்த 7ஆம் தேதி அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். எட்டாம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ஹிந்தி மொழியில் அவர் பேசியுள்ளார். 

இந்த வீடியோவை கண்ட உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள், இவரது பேச்சு சர்ச்சையாக இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

உத்திரப் பிரதேசத்தை சார்ந்த பாஜக பிரமுகர் வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உ.பி காவல் துறையினர்

சைபர் கிரைம் உதவியுடன் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து மன்மோகன் மிஸ்ராவை கைது செய்ய போலீசார் விரைந்தனர். 

சென்னைக்கு விரைந்து தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளனர். 

எங்கள் வாழ்க்கையே சிவப்பு சொல்கிறார் பாலியல் தொழிலாளி !

சென்னை மாதவரத்தில் இருந்த மன்மோகன் மிஸ்ராவை அவர் வீட்டில் வைத்து கைது செய்த உத்தரப் பிரதேசம் போலீசார், 

மாதவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் மன்மோகன் மிஸ்ராவை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

சென்னையிலிருந்து பிரதமரை திட்டி வீடியோ வெளியிடவும் மறுநாளே அது உத்தரபிரதேசத்தில் ஒருவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படும், 

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

அம்மாநில போலீஸார் விரைந்து வந்து மன்மோகன் மிஸ்ராவை அள்ளிக் கொண்டு போனதும் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோடியை அவதூறாக பேசியவரை சென்னை வந்து தூக்கி சென்ற உ.பி. போலீஸ் !

இது தொடர்பாக தமிழக காவல்துறையினர் தெரிவிக்கையில்,  யூடியூபில் வீடியோ பதிவு செய்பவர்கள் சட்டத்தை மீறி எந்த வீடியோவும் பதிவிட கூடாது. 

சட்டத்தை மீறி அரசியல் கட்சி தலைவர்கள், ஆட்சி தலைவர்கள் போன்றோரை விமர்சித்து வெளியிடப்படும் வீடியோ குறித்து, 

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

இந்தியாவில் உள்ள எந்த ஊரில் புகார் அளித்தாலும், உங்களை உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் 

சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்வார்கள் " என்றும் தெரிவிக்கின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings