வெயில் காலம் என்பதால், அதிகப்படியான வெப்பத்தால் உடலில் பல மோசமான பிரச்சனைகள் வரக்கூடும். அதில் முக்கியமான ஒன்று தான் சன் ஸ்ட்ரோக்.
உடலுக்கு வெப்பம் தேவை அதுவே, அளவுக்கு மீறும் போது, வியர்வையாகவோ, தோல் வழியாகவோ வெளியேறி விடும்.
சன் ஸ்ட்ரோக் என்பது சாதா விஷயமல்ல... மிகவும் ஆபத்தானது. இதனால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக அளவு வெப்பம் தாக்கும் போது, உடல் திணறிப் போய் விடும்.
அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !
இப்படிப் போகும் போது, உடலில் உள்ள வெப்பம் 41 செல்சியஸ் டிகிரியை தாண்டி விடும் போது தான் ஆபத்து காத்திருக்கிறது. அது தான் சன் ஸ்ட்ரோக் ஆரம்பம்.
அந்த நிலையில், உடலில் நீர் வற்றிப் போகிறது; வெப்பம் அதிகரிக்கிறது. அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன; விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.
வெயிலுக்கு மரணம் என்று படிக்கிறோமே தவிர, எதனால் மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை. விழிப்புணர்வு இருந்தால் பலிகளை தவிர்க்கலாம்.
இந்த சன் ஸ்ட்ரோக் உடல் வெப்பத்தை அதிகரித்தல், வலிப்பிடிப்புகள் மற்றும் கோமா என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
ஆகவே சன் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க வேண்டுமெனில், உடல் வெப்பத்தை தணிப்பதற்கு முறையான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் சன் ஸ்ட்ரோக் வந்தால், உடலின் வெப்பமானது அசாதாரணமாக இருப்பதோடு, அந்த வெப்பத்தால் உடலின் பாகங்களும் பாதிப்படையும்.
மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
குறிப்பாக உடல் வெப்பமானது 40 டிகிரி செல்சியஸ் மேல் இருந்தால், உடல் சோர்வு, மயக்கம் மற்றும் அடிக்கடி வாந்தி போன்றவை ஏற்படும்.
இந்த நிலையில் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவது மிகவும் இன்றியமையாதது.
மேலும் சன் ஸ்ட்ரோக் வருவதற்கு அதிகப்படியான உடல் வெப்பம் மட்டும் காரணமில்லை, குறைவாக வியர்த்தல், அதிகமான அளவில் ஆல்கஹால் பருகுவது,
உடல் வறட்சி, கடுமையான உடற்பயிற்சி, கனிமச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலுடன் வேலை செய்வது என்று பல உள்ளன.
கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?
ஆகவே சன் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு இது தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவை கோடையில் ஏற்படும் பொதுவான உடல் பிரச்சனையாகும்.
இத்தகைய சன் ஸ்ட்ரோட் இருப்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை வாந்தி, மயக்கம், காய்ச்சலின் போது 40 டிகிரி செல்சியலுக்கு மேல் வெப்பநிலை இருப்பது,
தலைவலி, நாடித்துடிப்புகள் அதிகமாக இருப்பது, வியர்வையின் அளவு குறைவாக இருப்பது, தசை வலி மற்றும் பிடிப்பு, வேகமாக சுவாசித்தல் போன்றவை.
அதே சமயம், சருமம் சூடாகவும், வறட்சியுடனும் இருப்பதோடு, மனநிலையானது மிகுந்த குழப்பத்துடன் இருக்கும்.
எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !
சரி, இப்போது இத்தகைய மோசமான சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கு எந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, சன் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தில் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ளதால், அது சன் ஸ்ட்ரோக்கை தடுக்கும்.
அதற்கு வெள்ளை வெங்காயத்தை பாக்கெட்டிலோ அல்லது பையிலோ வைத்துக் கொள்வது, அதிகப்படியான வெப்பம் உடலில் ஊடுருவுவதை தடுக்கும்.
மேலும் சன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு, வெங்காயத்தை அரைத்து, அதனை நெற்றில் வைத்தால், சன் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடலாம்.
நீர்ச்சத்து
கோடையில் வெப்பம் அதிகம் இருப்பதால், உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?
இதனால் வறட்சியின் காரணமாக ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கை தடுக்கலாம். குறிப்பாக சன் ஸ்ட்ரோக் உள்ளவர்கள், நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
புளி
புளியின் கொட்டையில் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் பொருள் நிறைய உள்ளது. அதற்கு புளிக் கொட்டையை நீரில் சேர்த்து அரைத்து, சர்க்கரை போட்டு கலந்து, குடிக்க வேண்டும்.
வெந்தயக்கீரை
காய்ந்த வெந்தயக் கீரையின் இலைகள் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் தன்மையுடையவை.
ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !
அதற்கு காய்ந்த வெந்தயக் கீரையின் இலைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின்னர் அதனை கைகளால் கசக்கி, தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அதிலும் இந்த கலவையை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
சன் ஸ்ட்ரோக்கை போக்க சிறந்த வழி நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது தான்.
குறிப்பாக தர்பூசணி, அன்னாசி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவை உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளக் கூடியவை.
மோர்
மோர் கூட சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் தன்மையுடையவை. நம் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் தராமல், தாகத்தை தனித்து உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கும்.
ஏ.டி.எம்.-இல் கேன்சல் க்ளிக் செய்தால் என்ன நடக்கும்?
அதிலும் சன் ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் தெரியும் போது, அது போகும் வரை தினமும் 2-3 டம்ளர் மோர் குடித்தால், இந்த பிரச்சனையை குணப்படுத்தலாம்.
இல்லையெனில் தயிரை நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பமானது தணியும்.
பச்சை மாங்காய்
மாங்காய் சாப்பிட்டாலும் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தலாம். இதனால் வியர்குரு வருவது தடுக்கப்படுவதோடு, அதிகப்படியான வெயிலால் ஏற்படும் அபாயங்களும் தடுக்கப்படும்.
அதுவும் மாங்காயை வேக வைத்து, அதன் தோலை உரித்து, சர்க்கரை, சீரகப் பொடி, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அரைத்து
பாலியல் இச்சைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள்.. ஆய்வில் அதிர்ச்சி !
ஜூஸ் போன்று செய்து, வெளியே வெயிலில் செல்லும் முன் குடித்தால், எளிதில் சன் ஸ்ட்ரோக்கானது நீங்கி விடும்.
Thanks for Your Comments